Home சினிமா கோலிவுட் தல ரசிகர்கள் காத்திருங்க: 28 வருட சினிமா வாழ்க்கைக்கு மரியாதை செலுத்தும் பிரேம்ஜி!

தல ரசிகர்கள் காத்திருங்க: 28 வருட சினிமா வாழ்க்கைக்கு மரியாதை செலுத்தும் பிரேம்ஜி!

334
0
Ajith 28 Years Of Cinema

Thala Ajith; தல ரசிகர்கள் காத்திருங்க: 28 வருட சினிமா வாழ்க்கைக்கு மரியாதை செலுத்தும் பிரேம்ஜி! அஜித்தின் 28 வருட சினிமா வாழ்க்கையை பறைசாற்றும் விதமாக வரும் 31 ஆம் தேதி நடிகர் பிரேம்ஜி அமரன் வீடியோ வெளியிட இருக்கிறார்.

அஜித்தின் சினிமா வாழ்க்கையை போற்றும் வகையில் நடிகர் பிரேம்ஜி அமரன் வரும் 31 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வீடியோ வெளியிட இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தனது விடா முயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றின் மூலம் முன்னேறியவர் தல அஜித். ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துவிட்டு, அவரது வேலையை மட்டும் பார்த்து வருகிறார்.

அவர் உண்டு அவரது வேலை உண்டு என்று இருப்பவர். எப்போதும் ரசிகர்களை மதிக்கும் நடிகர் என்றால், தல அஜித். ரசிகர்கள் விரும்பினால், அவர்களுடன் செல்ஃபி எடுத்து கொள்ளவும் தயங்கமாட்டார்.

யாரையும், காலில் விழ வைக்கவும் மாட்டார், யாருடைய காலிலும் விழவும் மாட்டார். யாருக்கும் தெரியாமலே தன்னால் முடிந்த உதவிகளை செய்து வரும் குணம் கொண்டவர்.

தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக அனைத்து படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா முற்றிலும் சரியான பிறகே வலிமை படத்தின் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என்று அஜித் தயாரிப்பாளரிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

அதோடு, தனது சம்பளத்தின் ஒரு பகுதியை குறைத்துக் கொள்ள இருப்பதாகவும் போனி கபூருக்கும் மெயில் அனுப்பியுள்ளார் என்று அண்மையில் செய்தி வெளியானது.

இந்த நிலையில், தற்போது தல அஜித் சினிமாவிற்கு வந்து கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனை தல ரசிகர்கள் #28YrsOfAjithismCDPBlast என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.

அதோடு, பொதுவான புகைப்படம், Common DP உருவாக்கி அதனை மகத், விக்னேஷ் சிவன், டிடி, பிந்து மாதவி, ராகுல் தேவ், நிக்கி கல்ராணி, விதார்த் என்று ஏராளமான பிரபலங்கள் அனைவரையும், அவரவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட செய்துள்ளனர்.

ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிரபலங்களும் அவ்வாறு செய்துள்ளனர். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமராவதியில் ஆரம்பித்து, பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே, ஆசை, வான்மதி, வாலி, கல்லூரி வாசல், மைனர் மாப்பிள்ளை, நேசம், உல்லாசம், அவள் வருவாளா, உயிரோடு உயிராக, முகவரி, தொடரும்,

ஆனந்த பூங்காற்றே, நீ வருவாய் என, சிட்டிசன், ஆஞ்சநேயா, அட்டகாசம், பரமசிவன், ஆழ்வார், திருப்பதி, வரலாறு, கிரீடம், மங்காத்தா, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என்று 59 படங்களில் நடித்துள்ளார்.

தற்போது 60 ஆவது படமான வலிமை என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக டுவிட்டரில் அஜித்தின் 28 வருட சினிமா வாழ்க்கையை பறைசாற்றும் விதமாக #AjithismCDPCelebritiesList என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இதன் காரணமாக காமென் டிபியை ரசிகர்கள் உருவாக்கி அதனை மகத், விக்னேஷ் சிவன், பிந்து மாதவி, ராகுல் தேவ், பிரசன்னா, பிரேம்ஜி அமரன், ஆர்த்தி, வித்யு ராமன், நந்திதா, பார்வதி நாயர், நிக்கி கல்ராணி ஆகிய பிரபலங்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் அஜித்தின் காமென் டிபி புகைப்படத்தை வெளியிட்டனர்.

இந்த நிலையில், இதற்கு அடுத்தகட்டமாக அஜித்தின் 28 வருட சினிமா வாழ்க்கையை போற்றும் வகையில், பிரேம்ஜி அமரன் வீடியோ ஒன்றை வெளியிட இருக்கிறார்.

வரும் 31 ஆம் தேதி மாலை 6 மணிக்கு அந்த வீடியோவை பிரேம்ஜி அமரன் வெளியிடுகிறார்.

Previous articleஅண்ணாத்த சம்பளத்த திருப்பி கொடுத்துட்டாரா?
Next articleகாக்க…காக்க…சுற்றுச்சூழல் காக்க…மத்திய அரசின் EIA 2020 வரைவுக்கு சூர்யா எதிர்ப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here