Home சினிமா கோலிவுட் அண்ணாத்த சம்பளத்த திருப்பி கொடுத்துட்டாரா?

அண்ணாத்த சம்பளத்த திருப்பி கொடுத்துட்டாரா?

302
0
Annaatthe Salary Rajinikanth

Rajinikanth Annaatthe; அண்ணாத்த சம்பளத்த திருப்பி கொடுத்துட்டாரா? அண்ணாத்த படத்தின் சம்பளத்தை ரஜினிகாந்த் திருப்பி கொடுத்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

ரஜினிகாந்த், அண்ணாத்த படத்திற்காக வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்ததாக தகவல் பரவி வருகிறது.

தர்பார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் அண்ணாத்த. இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்கி வருகிறார்.

அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி, பிரகாஷ் ராஜ், லிவிங்ஸ்டன், ஜார்ஜ் மரியன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

இமான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

குடும்ப கதையை மையப்படுத்திய படமாக அண்ணாத்த உருவாக்கப்பட்டு வருகிறது. முதலில் இந்தப் படம் வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா காரணமாக அனைத்து படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதோடு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

கொரோனா காரணமாக அண்ணாத்த படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை ரஜினிகாந்த் அடுத்த வருடத்திற்கு தள்ளி வைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், அண்ணாத்த படக்குழுவினரின் பாதுகாப்பு கருதி, படத்தின் படப்பிடிப்பை அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் விளைவாக, இந்த வருடத்தில் படப்பிடிப்பு முடியும் என்ற நிலையில், இருந்த அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதனால், பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருந்த அண்ணாத்த படம் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது ஒரு புறம் இருக்க, அண்ணாத்த படத்திற்காக வாங்கிய சம்பளத்தை ரஜினிகாந்த் திரும்ப கொடுத்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது.

அதோடு, படப்பிடிப்புக்கு நிறைய சிக்கல்கள் இருப்பதாலும், காலதாமதம் ஆவதாலும், அண்ணாத்த படம் டிராப்பானதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லாத நிலையில், ரஜினிகாந்த் என்பதால், இது போன்று தகவல் பரவி வருகிறது.

இதற்கு முன்னதாக ரஜினிகாந்த் இபாஸ் இல்லாமல், கேளம்பாக்கம் சென்றதாகவும், அவர் சீட் பெல்ட் அணியாமல் சென்றதால் அவருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டதாகவும் தகவல் வந்தது.

அண்மையில், கந்த சஷ்டி குறித்து ரஜினிகாந்த் கந்தனுக்கு அரோகரா என்று டுவிட்டரில் பதிவிட்டது உலகளவில் டிரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleமத்திய அரசின் ‘EIA 2020’ வரைவு: கார்த்தி எதிர்ப்பு!
Next articleதல ரசிகர்கள் காத்திருங்க: 28 வருட சினிமா வாழ்க்கைக்கு மரியாதை செலுத்தும் பிரேம்ஜி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here