Home சினிமா கோலிவுட் நடிகர் சங்க வாட்ஸாப்பில் அசிங்கமான பதிவுகள்

நடிகர் சங்க வாட்ஸாப்பில் அசிங்கமான பதிவுகள்

316
0
நடிகர் சங்க வாட்ஸாப்பில் அசிங்கமான பதிவுகள்

நடிகர் சங்க வாட்ஸாப்பில் அசிங்கமான பதிவுகள் இடம்பெற்று வருவதாக வெளியான தகவல்கள்தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

கோலிவுட் சினிமா: அலுவலக வேலை முதல் வெட்டி பேச்சு பேசுவது வரை அனைவரும் வாட்சப் குரூப் உருவாக்கி அதில் மற்றவர்களை இணைத்து தொடர்பில் இருந்துவருகின்றனர்.

இந்த வாட்சப் குரூப் சாட் என்பது தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. ஊரடங்கு காலத்தில் நடிகர் நடிகைகள் நேரில் சந்தித்து துறை சார்ந்த விவாதங்கள் செய்வது இயலவில்லை.

இதற்காக நடிகர் சங்க தலைமை பொறுப்பாளர் ஒருவர் முன்னணி நடிகர் நடிகைகைளை வாட்ஸாப்பில் இணைத்து அடிக்கடி முக்கிய தகவல்களை பரிமாறிக்கொள்ள ஒரு குரூப் உருவாக்கியுள்ளார்.

இந்த குரூப்பில் முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டும் அதற்கான கருத்துக்களை தெரிவித்தும் அவற்றை செயல்படுத்தி வருகின்றனர். எல்லா இடத்திலும் யாரோ ஒருவர் பிரச்சனை செய்யத்தான் செய்வார்கள்.

இதேபோல் இந்த குரூப்பிலும் சமீபத்தில் அசிங்கமான பதிவுகள் சில இடம்பெற்று வருகின்றன. ‘நானெல்லாம் பாக்கத்தான் டீசென்ட், இறங்கினேன்னா பக்கா லோக்கல்’ என்பது போல் ஆகிவிட்டது.

இந்த குறிப்பிட்ட வாட்ஸாப் குரூப்பில் உள்ள சில நடிகர் நடிகைகள் தொடர்ந்து கெட்ட கெட்ட வார்த்தைகளில் சண்டை போட்டு வருவதால் சகிக்க முடியாமல் சிலர் அந்த குரூப்பை விட்டு வெளியேறியுள்ளனர்.

திட்டுவதற்க்கென்றே புத்துப்புது வார்த்தைகளை தேடி தேடி ஒருவரை ஒருவர் திட்டு வருகின்றனராம். இந்த விவகாரம் தான் கோலிவுட் வட்டாரத்தில் தற்போது பேசப்பட்டுவரும் பரபரப்பான செய்தி.

Previous articleஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கே.எஸ்.ரவிக்குமார்
Next articleவெட்டுகிளி கூட்டம் தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்குமா? விவசாயிகள் அச்சம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here