Home சினிமா கோலிவுட் சொந்த கிராமத்தில் தெரு தெருவாக கிருமி நாசினி தெளிக்கும் விமல்!

சொந்த கிராமத்தில் தெரு தெருவாக கிருமி நாசினி தெளிக்கும் விமல்!

413
0
Vimal Corona Awareness

Vimal Corona Awareness; சொந்த கிராமத்தில் தெரு தெருவாக சுற்றும் நடிகர் விமல்! நடிகர் விமல் தனது சொந்த கிராமத்தில் ஒவ்வொரு தெருவாக சென்று கிருமி நாசினி தெளித்து கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

நடிகர் விமல் தனது சொந்த கிராமத்திற்கு சென்று அங்குள்ள தெருக்களில் கிருமி நாசினி மருந்து அடித்து மக்களை பாதுகாத்து வருகிறார்.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறார். இதுவரை இந்தியாவில் மட்டும் 25 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மக்களை பாதுகாக்கும் பொருட்டு கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு சினிமா பிரபலங்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.

சிலர் களப்பணிகளிலும் தங்களை ஈடுபடுத்தியுள்ளனர். அந்த வகையில், நடிகர் விமல், நேற்று தனது சொந்த ஊரில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்து பன்னாங்கொம்பைச் சேர்ந்த விமல், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்களில் இளைஞர்களுடன் இணைந்து ஈடுபட்டுள்ளார்.

அப்போது தனது கிராமத்தில், உள்ள ஒவ்வொரு தெருவிற்கும் சென்று கொரோனாவுக்கு எதிராக கிருமி நாசினி மருந்து தெளித்து வருகிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleசன் டிவி சீரியலில் யூடியூப் கிங் யார்?
Next articleஜெர்மன்: கொரோனாவால் நிதியமைச்சர் தற்கொலை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here