Home சினிமா இந்திய சினிமா நடிகை ஷோபனா பிறந்தநாள்

நடிகை ஷோபனா பிறந்தநாள்

503
0

இந்திய நடிகையும் மற்றும் பிரபல பரத நாட்டிய கலைஞரான பத்மஸ்ரீ மற்றும் கலைமாமணி ஷோபனா 1970ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தவர்.

இவரின் முழுப் பெயர் ஷோபனா சந்தரகுமாரி பிள்ளை ஆகும்

இவர் மலையாளத்தில் மட்டுமில்லாமல் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் 1993 ஆம் ஆண்டு மனிசித்ரதாலு (இந்த படம் தமிழில் ரஜினி நடித்த சந்திரமுகி) படத்திற்கும் மற்றும் மிட்ர் மை ஃப்ரண்ட் படத்திற்கும் இரண்டு தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

இந்திய அரசாங்கம் இவரை கௌரவப்படுத்தும் விதமாக இவருக்கு பத்மஸ்ரீ விருதும், தமிழ்நாடு அரசு அவரை கவுரவப்படுத்தும் விதமாக கலைமாமணி விருதும் வழங்கியுள்ளது.

தூர்தர்ஷன் இவரை கௌரவப்படுத்தும் விதமாக கிரேடு ஏ டாப் விருதும், கேரளா சங்கீத நாடக அகடமி இவருக்கு கலை ரத்னா விருது கொடுத்து கௌரவ படுத்தி உள்ளது.

கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள செயின்ட் தாமஸ் மேல்நிலைப் பள்ளியில் படித்தார்.

திருவாங்கூர் சகோதரிகள் ஆன லலிதா, ராகினி பத்மினி ஆகியோரின் சொந்தக்காரரான சோபனா, நடிகை சுகுமாரி, அம்பிகா சுகுமாரன் நடிகர் வினித் போன்றவர்களின் சொந்தக்காரரும்.

ஆவார் டாக்டர் எம்ஜிஆர் அறக்கட்டளை இவரை கௌரவப்படுத்தும் விதமாக டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

இவர் முதன்முதலாக 1980 ஆம் ஆண்டு தமிழில் ‘மங்கள நாயகி’ படத்தின் மூலம் அறிமுகமாகி பிறகு மிகப்பெரிய இந்திய நடிகை ஆனார்.

இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் நடித்த சிவா, தளபதி, கோச்சடையன், பாக்யராஜின் ‘இது நம்ம ஆளு’, விஜயகாந்துடன் ‘பொன்மனச் செல்வன்’ போன்ற படங்கள் இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.

2012ஆம் ஆண்டு சிம்பு நடித்து வெளியான போடா போடி படத்தில் வரலட்சுமியின் தாயாக நடித்திருப்பார்.
பிறகு சோபனா மலையாள படங்களில் அதிகம் நடித்து தமிழ் படங்களை தவிர்த்தார்.

2019ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் நான்கில் ஜட்ஜாக பணியாற்றினார். மலையாளத்திலும் டிவி ஷோக்களில் பங்கேற்று வருகிறார்.

1991 ஆம் ஆண்டு பொதிகையில் ஒளிபரப்பான பெண் தொடரிலும், 1999 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான உறவுகள் தொடரிலும் நடித்துள்ளார்.

இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இன்றளவும் இந்தியாவில் உள்ளனர். இவர் நடிப்பிலும் சரி படத்திலும் சரி மற்றவர்களை ஈர்க்கக் கூடியது இவரது இயல்பாக இருக்கும்.

இவர் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here