Ajith Vijay Friendship ; அஜித் – விஜய் நட்பின் விலைமதிப்பற்ற 5 முக்கியமான தருணங்கள்! விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். ஆனால், அஜித், விஜய் இருவருமே நண்பர்களாகவே இருந்து வருகின்றனர்.
சினிமாவில் அறிமுகமான காலத்தில் இருந்து அஜித், விஜய் இருவருமே படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். ஆனால், போட்டியாக இல்லை.
இருவருமே நண்பர்களாகவே இன்றும் இருக்கின்றனர். ஒருவருக்கொருவர் மற்றவர்களை பெருமையாக பேசவும் செய்கின்றனர்.
ஆனால், அவர்களது ரசிகர்கள் ஏனோ தெரியவில்லை, ஒருவருக்கொருவர் வசைபாடி வருகின்றனர்.
அமராவதி
அமராவதி வெளியான முதல் நாள் மேட்னீ ஷோவில் அஜித் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா நின்று கொண்டிருந்த போது இளைஞர்கள் ஒரு சிலர் திரையரங்குகளுக்கு விரைந்தனர், அவர்களில் ஒருவர் முன் வந்து அஜித் குமாரை வாழ்த்தியதோடு தான் விஜய் என்று அவர் கூறியுள்ளார்.
நேருக்கு நேர்
இயக்குநர் வசந்த் இயக்கத்தில் விஜய், சூர்யா, சிம்ரன், கௌசல்யா ஆகியோரது நடிப்பில் வந்த படம் நேருக்கு நேர்.
கடந்த 1997 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்தப் படத்தில் விஜய் முதலில் அவரது நண்பரான அஜித்தை வைத்துதான் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார்.
ஆனால், சில நாட்கள் படப்பிடிப்பிற்குப் பிறகு சில காரணங்கள் காரணமாக அஜித் அந்தப் படத்திலிருந்து வெளியேறிவிட்டார். படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் கூட சமூக வலைதளங்களில் இன்னமும் உலா வருகிறது.
அழகிய தமிழ் மகன் – அஜித் தான்
இயக்குநர் பரதன் இயக்கத்தில் விஜய், ஸ்ரேயா ஆகியோரது நடிப்பில் வந்த படம் அழகிய தமிழ் மகன். இப்படத்தின் படப்பிடிப்பின் போது தனியார் ஆங்கில சேனல் ஒன்றிற்கு விஜய் பேட்டியளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், அஜித் போன்ற நடிகருக்கு அழகிய தமிழ் மகன் என்ற டைட்டில் பொருத்தமானதாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
அஜித் – பில்லா
கடந்த 2007 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வந்த படம் பில்லா. இப்படத்தின் பில்லா தீம் மியூசிக் வெளியான உடன் விஜய், அதனை உடனடியாக தனது செல்போனில் ரிங் டோனாக வைத்துள்ளார்.
இன்றும், இது பற்றி பலருக்கும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்துக்கு வாட்ச் கொடுத்த விஜய்
வேலாயுதம் மற்றும் மங்காத்தா படங்களின் படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் நடந்தது. அப்போது அஜித், வேலாயுதம் படப்பிடிப்பில் இருந்த விஜய் மற்றும் அவரது படக்குழுவினரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க அஜித் சென்றார்.
அங்கு சென்ற அவருக்கு விஜய் தனது நினைவுப்பரிசாக அஜித் கையில் வாட்ச் மாட்டிவிட்டார் என்று மங்காத்தா இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்தார்.
அது யாருக்குமே மறக்க முடியாத ஒரு நினைவாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாஸ்டர்: நண்பர் அஜித்
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவின் போது கோட் சூட் அணிந்து வந்த விஜய், தான் நண்பர் அஜித் மாதிரி உடை அணிந்து வர வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறு வந்ததாக குறிப்பிட்டார்.