Home சினிமா கோலிவுட் Ajith போனி கபூர் வீட்டில் தல அஜித்!

Ajith போனி கபூர் வீட்டில் தல அஜித்!

391
0
Ajith at Boney Kapoor House

Ajith, Sridevi மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் திதி நிகழ்வில் தல அஜித் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித் Ajith போனி கபூர் (Boney Kapoor) வீட்டிற்கு சென்ற வீடியோ மற்றும் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி (SriDevi). தனது 4 வயது முதலே சினிமாவில் காலூன்றி வந்தார்.

தமிழில் கந்தன் கருணை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு மூன்று முடிச்சு படத்தின் மூலம் ஹீரோயினானார்.

தொடர்ந்து இந்திய சினிமாவில் புகழ்பெற்று விளங்கியதால் இந்திய சினிமாவின் முதல் பெண் சூப்பர்ஸ்டார் என்றழைக்கப்பட்டார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இவர், பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகியிருந்தார்.

அதன் பிறகு இங்கிலிஸ் விங்கிலிஸ் என்ற படத்தின் மூலம் மீண்டும் எண்ட்ரி கொடுத்தார். 2012 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் அஜித் (Ajith) சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வந்த புலி படத்தில் நடித்தார். ஹிந்தியில் மாம் என்ற படத்திலும், ஜீரோ என்ற படத்திலும் நடித்தார்.

இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருந்தார்.

ஆனால், எதிர்பாராத விதமாக அங்கு உயிரிழந்தார். அவரது 2ம் ஆண்டு நினைவு தினம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி. இந்த நிலையில், தற்போது ஸ்ரீதேவிக்கு திதி கொடுக்கும் நிகழ்வு சென்னை சிஐடி நகரில் உள்ள போனி கபூர் (Boney Kapoor House) இல்லத்தில் நடந்தது.

போனி கபூர் வீட்டில் அஜித் (Ajith, Boney Kapoor)

இதில், போனி கபூரின் குடும்பத்தினருடன் தல அஜித்தும் கலந்து கொண்டார். அஜித் தனது காரில் போனி கபூர் இல்லத்திற்கு செல்லும் வீடியோவும், அங்கிருந்து புறப்படும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போனி கபூரின் குடும்பத்தினருடன் அஜித் புகைப்படம் எடுத்துக் கொண்டதும் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

இதன் காரணமாக #Valimai (வலிமை) #HVinoth (ஹெச்வினோத்) #Ajith (அஜித்) ஆகிய ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

தற்போது அஜித் இயக்குநர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை Valimai படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இந்தப் படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது. கடந்த ஆண்டு ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleபரதேசி பட அதர்வா ஸ்டைலில் கீர்த்தி சுரேஷ்!
Next articleBiskoth First Look: பிஸ்கோத் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here