Home சினிமா கோலிவுட் பரதேசி பட அதர்வா ஸ்டைலில் கீர்த்தி சுரேஷ்!

பரதேசி பட அதர்வா ஸ்டைலில் கீர்த்தி சுரேஷ்!

470
0
Keerthy Suresh

Keethy Suresh, கீர்த்தி சுரேஷின் புதிய லுக் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷ். பைலட் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் கால்பதித்தார்.

தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார். இப்படத்திற்கு தேசிய விருதும் பெற்றார்.

கடந்தாண்டு விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் நடித்திருந்தார். தற்போது மிஸ் இந்தியா, மரக்கார் அரப்பிக்கடலிண்டே சிம்ஹம், பென்குயின், குட் லக் சகி, அண்ணாத்த ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் மரக்கார் அரப்பிக்கடலிண்டே சிம்ஹம் (Marakkar: Arabikadalinte Simham).

இந்தப் படத்திற்காக தன்னை தயாரிபடுத்திக் கொண்ட கீர்த்தி சுரேஷின் புதிய தோற்றம் ஒரு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

16 ஆம் நூற்றாண்டில் கேரள நாட்டில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்கார் என்று போற்றப்பட்டனர்.

இவர்களில் வீர, தீரம் கொண்டவராக கருதப்பட்டவர் 4ஆவது குஞ்சலி மரைக்கார். தற்போது இவரது வாழ்க்கையை மையப்படுத்தி மரைக்கார் அரப்பிக்கடலிண்டே சிம்ஹம் என்ற படம் தயாராகி வருகிறது.

இதில், குஞ்சலி மரைக்கார் என்ற ரோலில் மோகன்லால் நடித்து வருகிறார். இவருடன் இணைந்து மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், அர்ஜூன், சுனில் ஷெட்டி ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh)

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. வரும் 26 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஆர்ச்சா என்ற ரோலில் நடித்துள்ளார்.

இந்த கதாபாத்திரத்திற்காக கேரளத்து பாரம்பரிய உடையுடனும், வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடனும் தோற்றமளிக்கிறார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு முன்னதாக இயக்குநர் பாலா இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வந்த பரதேசி படத்தில் அதர்வா வித்தியாசமான ஹேர்ஸ்டைல் வைத்திருப்பார்.

தற்போது அதே ஹேர்ஸ்டைலில்தான் கீர்த்தி சுரேஷ் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

SOURCER SIVAKUMAR
Previous articleMalavika Mohanan; மீண்டும் பாலிவுட் படத்தில் மாளவிகா மோகனன்!
Next articleAjith போனி கபூர் வீட்டில் தல அஜித்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here