Home சினிமா கோலிவுட் Anushka: அனுஷ்காவுக்கு இவர் தான் மாப்பிள்ளையா?

Anushka: அனுஷ்காவுக்கு இவர் தான் மாப்பிள்ளையா?

298
0
Anushka Marriage

Anushka: அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும், விவாகரத்தான இயக்குநரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அனுஷ்கா. சுந்தர் சி இயக்கத்தில் வந்த ரெண்டு படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வந்த வேட்டைக்காரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

அதன் பிறகு சிங்கம், வானம், தெய்வ திருமகள், தாண்டவம், அலெக்‌ஷ் பாண்டியன், சிங்கம் 2, இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால், பாகுபலி, இஞ்சி இடுப்பழகி, தோழா, பாகுபலி 2 என்று பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மொழியைத் தவிர தெலுங்கு மொழியில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

தற்போது நிசப்தம் என்ற படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அனுஷ்கா, ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, சிம்பு ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். 38 வயதாகும் அனுஷ்காவிற்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

இதற்கு முன்னதாக பாகுபலி படத்தின் போது அனுஷ்காவிற்கும், பிரபாஸ்க்கும் இடையில் காதல் கிசுகிசு இருப்பதாக கூறப்பட்டது. இதை இருவரும் மறுத்தனர். பின்னர், பிரபல தொழிலதிபரை அனுஷ்கா திருமணம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அப்படி ஒன்றும் இதுவரை நடக்கவில்லை.

இதற்கிடையில், கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாகவும், அவருடன் டேட்டிங் சென்றதாகவும் செய்தி வெளியாகியது. மேலும், அவர் வட இந்தியர் என்றும், தென்னிந்திய அணி சார்பில் ரஞ்சி டிராபியில் விளையாடி வருகிறார் என்றும் கூறப்பட்டது.

அனுஷ்காவின் இஞ்சி இடுப்பழகி, சைஸ் ஜீரோ ஆகிய படங்களை தெலுங்கு இயக்குநரான பிரகாஷ் கோவலமுடி என்பவர் இயக்கியிருந்தார். இவரைத் தான் அனுஷ்கா திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. 44 வயதாகும் பிரகாஷ் கோவலமுடிக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியை விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எது எப்படியிருந்தாலும் இதுவும் ஒரு தகவல்தான். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை எல்லாமே வதந்தியாகவும், செய்தியாகவுமே இருக்கும்.

SOURCER SIVAKUMAR
Previous articleVijay Sethupathy; விஜய் சேதுபதிக்கு ஸ்ரீமன் முத்தம்!
Next articleபொள்ளாச்சி பாணியில் தென்காசி பாலியல் கும்பல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here