Home சினிமா கோலிவுட் ஒருவேளை சோற்றுக்கும் வழியில்லை: பூமி டீசர்!

ஒருவேளை சோற்றுக்கும் வழியில்லை: பூமி டீசர்!

358
0
Bhoomi Teaser

Bhoomi Teaser; பூமி டீசர் வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பூமி படத்தின் டீசர் (Bhoomi Teaser) வெளியாகியுள்ளது.

லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்தி அகர்வால் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் பூமி (Bhoomi).

ஜெயம் ரவியின் 25 ஆவது படமாக (Jayam Ravi) உருவாகி வரும் பூமி முழுக்க முழுக்க விவசாயத்தைப் பற்றியும் விவசாயிகளின் அவல நிலையை சித்தரிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜெயம் ரவியின் 25 ஆவது படம் என்பதால், நல்ல கதையை தேர்வு செய்து நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் மே மாதம் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டும், தல அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டும் பூமி படம் திரைக்கு வருகிறது.

பூமி டீசர் (Bhoomi Teaser)

இந்த நிலையில், பூமி படத்தின் டீசர் வெளியாகி சமூக ஊடகங்களில் விவசாயிகளின் குரல் எதிரொளித்து வருகிறது.

ஆம், இந்த டீசரில் விவசாயிகளையும், விவசாயத்தையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வட்டிக்கு காசு வாங்கி விவசாயம் செய்தும், ஒருவேளை சோற்றுக்கு வழியில்லாமல் இருக்கிறோம்.

நாட்டோட எல்லா வளத்தையும் நாசம் பண்ணிட்டு, நீங்க எல்லாம் என்ன பண்ணப்போறீங்க?

அடிமையாக இருக்கிறோம் என்பது தெரியும் வரை உன்ன மாதிரி ஆளுங்கள் இங்கே இருக்க முடியும் ஆகிய வசனங்கள் பூமி டீசரில் இடம்பெற்றுள்ளது.

ஆனால், வசனங்களை விட டீசரில் காட்டப்பட்ட காட்சிகளால் கண்களில் கண்ணீர் வருவதை உணர முடிகிறது.

விவசாயிகளின் போராட்டம், தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளும் நிலை, வறண்ட நிலம் போன்ற காட்சிகள்தான் கண்களில் தெரிகிறது.

சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் உருவான பூமி படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

பூமி படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து சதீஷ், ரோனித் ராய், ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜெயம் ரவி நடிப்பில், பேராண்மை, நிமிர்ந்து நில், ரோமியோ ஜூலியட், தனி ஒருவன், டிக் டிக் டிக், மிருதன், அடங்க மறு, கோமாளி ஆகிய மாஸ் படங்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleகண்ணனுக்குத் தெரியாத சுள்ளான்: 5 லட்சம் கோடி அவுட்
Next articleகீழ் சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா?: மண்ணுருண்ட பாடல் லிரிக் வெளியீடு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here