Home சினிமா கோலிவுட் கீழ் சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா?: மண்ணுருண்ட பாடல் லிரிக் வெளியீடு!

கீழ் சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா?: மண்ணுருண்ட பாடல் லிரிக் வெளியீடு!

3430
0
Soorarai Pottru Song Mannurunda Lyric Video

Mannurunda Lyric Video; மண்ணுருண்ட பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

சூரரைப் போற்று (Soorarai Pottru) படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் டிராக் மண்ணுருண்ட பாடல் லிரிக் (Mannurunda Lyric Video) வீடியோ வெளியாகியுள்ளது.

சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முன்னணி ரோலில் நடித்து வரும் படம் சூரரைப் போற்று.

ஏர் டெக்கான் நிறுவனத்தின் துணை நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) சூரரைப் போற்று படத்தை இயக்கியுள்ளார். வரும் மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினம் மற்றும் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு சூரரைப் போற்று படம் திரைக்கு வருகிறது.

மண்ணுருண்ட பாடல் லிரிக் வீடியோ (Mannurunda First Single Lyric Video)

இந்த நிலையில், சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் டிராக் மண்ணுருண்ட பாடல் லிரிக் வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

கிராமத்தில் நிகழ்ந்த ஒரு இறப்பு நிகழ்ச்சியை மையப்படுத்தி இந்தப் பாடல் அமைக்கப்பட்டுள்ளது என்று பாடல் வீடியோவைப் பார்த்தால் தெரிய வருகிறது.

இந்தப் பாடலை சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் (Senthil Ganesh) தனது குரலில் பாடி அனைவரையும் துள்ளிக் குதிக்க வைத்துள்ளார்.

கீழ் சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா?

மேல் சாதி காரனுக்கு கொம்பு இருந்தா காட்டுங்கையா

என்னங்கடா நாடு அட சாதிய தூக்கி போடு….

ஆகிய வரிகள் மண்ணுருண்ட பாடலில் இடம்பெற்றுள்ளது.

திரௌபதி படம் யாருக்கு லாபம்? – விமர்சனம்

மண்ணுருண்ட பாடலுக்கு ஏகாதேசி பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார்.

தமிழில் வெளியான மண்ணுருண்ட பாடல் லிரிக் வீடியோ தெலுங்கில் சித்ரமைனா பூமி என்ற டைட்டிலில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் சூரரைப் போற்று படத்தை தயாரித்துள்ளார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுடன் இணைந்து ஊர்வசி, கருணாஸ், ஜாக்கி ஷெராஃப், மோகன் பாபு, சம்பத் ராஜ், விவேக் பிரசன்னா, காளி வெங்கட் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

மண்ணுருண்ட பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து சுதா கொங்கரா (#SudhaKongara), சூரரைப் போற்று (#SooraraiPottru), செந்தில் கணேஷ்(#SenthilGanesh) ஆகியோரது டுவிட்டர் ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleஒருவேளை சோற்றுக்கும் வழியில்லை: பூமி டீசர்!
Next articleகொரோனா வைரசை சாகடித்து சாதனை படைத்த 100 வயது தாத்தா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here