Home சினிமா கோலிவுட் மக்கள் என்னை கோமாளியாகவே பார்க்கட்டும் – புகழ்

மக்கள் என்னை கோமாளியாகவே பார்க்கட்டும் – புகழ்

513
0
Cook With Comali மக்கள் என்னை கோமாளியாகவே பார்க்கட்டும் புகழ் அசால்ட் பேச்சு

மக்கள் என்னை கோமாளியாகவே பார்க்கட்டும்: புகழ் அசால்ட் பேச்சு! விஜய் டிவி ரியாலிட்டி ஷோ (Cook With Comali). வனிதா டைட்டில் வின்னர். புகழ் வித் ரம்யா பாண்டியன்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகழ் தனக்கு பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சி எல்லாம் வேண்டாம் என்று அசால்டாக தெரிவித்துள்ளார்.

விஜய் டிவி ரியாலிட்டி ஷோ (Cook With Comali)

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சியில், தாடி பாலாஜி, வனிதா, உமா ரியாஷ், ஞானசம்பந்தம், மோகன் வைத்யா, ரேகா, ரம்யா பாண்டியன், பிரியங்கா ரோபோ சங்கர் ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் இணைந்து கோமாளிகளாக சாய் சக்தி, பப்பு, புகழ், தங்கதுரை, சிவாங்கி, பிஜிலி ரமேஷ், பாலா, மணிமேகலை ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்.

வனிதா டைட்டில் வின்னர்

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் இந்நிகழ்ச்சி முடிவடைந்துள்ளது. இதில், வனிதா டைட்டில் வின்னர் என அறிவிக்கப்பட்டார்.

அவருக்கு ரூ.2 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. முதல் ரன்னராக உமா ரியாஷ் அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

2 ஆவது ரன்னராக ரம்யா பாண்டியன் அறிவிக்கப்பட்டார். ரேகா கடைசி இடம் பிடித்தார். இதே போன்று கோமாளிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

அதில், புகழுக்கு காதல் மன்னன், மணிமேகலைக்கு சூனிய பொம்மை, பாலாவிற்கு அடிதாங்கி, சிவாங்கிற்கு சிம்ம குரல் சிங்காரி என்று வழங்கப்பட்டது. போட்டியாளரான ரேகாவிற்கு சமாதான புறா என்று விருது வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி முடிந்ததைத் தொடர்ந்து அடுத்து எப்போது இந்நிகழ்ச்சியின் 2-ஆவது சீசன் தொடங்கப்படும் என்று ரசிகர்கள் தற்போதே கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர்.

புகழ் வித் ரம்யா பாண்டியன்

விஜய் டிவி ரியாலிட்டி ஷோ புகழ் வித் ரம்யா பாண்டியன்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அதிகளவில் பிரபலமானது என்னவோ புகழ் மற்றும் ரம்யா பாண்டியன்.

இந்நிகழ்ச்சியை குக் வித் கோமாளிக்குப் பதிலாக புகழ் வித் ரம்யா பாண்டியன் என்று குறிப்பிட்டால் கச்சிதமாக இருக்கும். அந்தளவிற்கு புகழ் மற்றும் ரம்யா பாண்டியனின் காம்பினேஷன் இருந்தது.

கடலூரைச் சொந்த ஊராக கொண்ட புகழ், படித்து முடித்துவிட்டு சென்னைக்கு வேலை தேடி வந்துள்ளார். அவர், சென்னையில் பார்க்காத வேலையே இல்லையாம். அந்தளவிற்கு எல்லா வேலைகளையும் பார்த்துள்ளார்.

அதனால், பல பிரச்சனைகளையும், கஷ்டங்களையும் அனுபவித்துள்ளார். முதலில் கலக்கப்போவது யாரு சீசன் 6 நிகழ்ச்சியில் லேடி கெட்டப் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து அது இது எது, சிரிச்சா போச்சு என்று வரிசையாக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இப்போது குக் வித் கோமாளி.

பிக் பாஸ் தமிழ் 4

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து விரைவில் தொடங்கப்பட உள்ள பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியில் புகழ் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக பலரும் தங்களது கருத்துக்களை இப்போதே தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து தனியார் நியூஸ் சேனல் ஒன்று புகழிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்த புகழ் கூறுகையில், “ஏன் இதுவரை நல்லாத்தான் போய்க்கிட்டு இருக்கிறது.

மக்கள் என்னை இனிமேல் கோமாளியாகவே பார்க்கட்டும். என்னை தூக்கி உள்ளே போட்டு அதுக்கு பின்புறம் அங்கிருந்து வெளியில எதுக்கு தேவையில்லாத வேலை.

பிக் பாஸ் எல்லாம் வேண்டாம். கோமாளி ஆர்மி வேண்டுமென்றால் தொடங்குங்கள். ஆனால், பிக் பாஸ் ஆர்மி மட்டும் வேண்டாம். இதற்கு முன் பல சீசன்களை நாம் பார்த்துவிட்டோம்.

இப்போது, இருக்கிற மாதிரி தான் உள்ளேயும் இருப்போம். ஆனால், ஒரு சின்ன விஷயம் கூட நம்மை கோபத்திற்கு உள்ளாக்கிவிடும்.

பிரச்சனை உண்டாகும். இதெல்லாம் எதற்கு. எப்போதும் போல மக்களை ஜாலியாகவே வைத்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

கடைசிவரை கோமாளியாக இருந்து மக்களை சிரிக்க வைக்க வேண்டும். யாரையும் கஷ்டப்படுத்தக் கூடாது என்பது தான் எனது நோக்கம்” என்று குறிப்பிட்டு கூறியுள்ளார்.

Previous articleகுக் வித் கோமாளி டைட்டிலை கைப்பற்றிய பிக் பாஸ் வனிதா!
Next articleதூங்கி வழியும் நடிகை அமலா பால்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here