Home சினிமா கோலிவுட் குக் வித் கோமாளி டைட்டிலை கைப்பற்றிய பிக் பாஸ் வனிதா!

குக் வித் கோமாளி டைட்டிலை கைப்பற்றிய பிக் பாஸ் வனிதா!

453
0
விஜய் தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சி குக் வித் கோமாளி விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியின் மகள் பிக் பாஸ் வனிதா

குக் வித் கோமாளி டைட்டிலை கைப்பற்றிய பிக் பாஸ் வனிதா. இவர் விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியின் மகள். விஜய் தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சி.

விஜய் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிக் பாஸ் வனிதா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியின் மகள்

நடிகர் விஜயகுமார் – நடிகை மஞ்சுளா தம்பதியரின் மகள் தான் வனிதா. இவர், விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

எனினும், அதிகளவில் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமானது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் 3 தான்.

இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். எனினும், பிக் பாஸ் நிகழ்ச்சியே மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாக காரணமாக அமைந்தது.

குக் வித் கோமாளி

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.

இவருடன் இணைந்து தாடி பாலாஜி, உமா ரியாஷ், ரேகா, பிரியங்கா ரோபோ சங்கர், ரம்யா பாண்டியன், ஞானசம்பந்தம், மோகன் வைத்யா ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் இணைந்து கோமாளியாக கலக்கப்போவது யாரு பிரபலங்கள் புகழ், பாலா, தங்கதுரை, சூப்பர் சிங்கர் பிகழ் சிவாங்கி, தொகுப்பாளினி மணிமேகலை, சாய் சக்தி, பப்பு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ரக்‌ஷன் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டனர்.

மிகவும் விறுவிறுப்பாகவும், நகைச்சுவையாகவும் சென்ற இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும், ஒரு போட்டியாளர் வெளியேற இறுதியாக இறுதிப் போட்டிக்கு ரேகா, வனிதா, ரம்யா பாண்டியன், உமா ரியாஷ் ஆகியோர் முன்னேறினர்.

இறுதிப் போட்டியில் பல கடுமையான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு ஒவ்வொரு போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல நிகழ்ச்சியைப் பார்க்கும் ரசிகர்களுக்கும் த்ரில்லாகவும், நகைச்சுவையாகவும் இருந்திருக்கும் என்பது உண்மை.

கிட்டத்தட்ட 4 ரவுண்டுகளை கொண்ட இந்த இறுதிப் போட்டியில் ஒவ்வொரு ரவுண்டுக்கும் 20, 30, 20, 30 மதிப்பெண்கள் அடிப்படையில் வின்னர் அறிவிக்கப்பட்டார்.

3 ரண்டுகள் முடிவில், ரம்யா பாண்டியன் மற்றும் வனிதா ஆகியோர் 63 மதிப்பெண்களும், உமா ரியாஷ் 61 மதிப்பெண்களும், ரேகா 50 மதிப்பெண்களும் பெற்றிருந்தனர்.

வின்னரை தீர்மானிக்கும் இறுதி ரவுண்டில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களது பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

எனினும் இதில், முதலாவது ரன்னராக உமா ரியாஷ் வெற்றி பெற்றார். அவருக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

2-ஆவது ரன்னராக ரம்யா பாண்டியன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வின்னராக வனிதா அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கோமாளிகளுக்கு நினைவு பரிசு

குக்குகளுக்கு பரிசு கொடுத்த வேலையில், கோமாளிகளுக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

அதில், பாலாவுக்கு அடிதாங்கி விருதும், மணிமேகலைக்கு சூனிய பொம்மை விருதும், புகழுக்கு காதல் மன்னன் விருதும், சிவாங்கிக்கு சிம்ம குரல் சிங்காரி விருதும், ரேகாவிற்கு சமாதான புறா விருதும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில், இந்நிகழ்ச்சியின் 2-ம் பாகம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி முடிந்த உடனேயே கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் நடுவராக கலந்து கொள்ள இருக்கிறாராம்.

இதனை உறுதி செய்யும் வகையில், வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்டு கலக்கப்போவது யாரு சீசன் 9 என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சி

கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடக்கப்பட்ட இந்நிகழ்ச்சியை தற்போது தங்கதுரை, ராமர், வடிவேலு பாலாஜி ஆகியோர் சிறப்பித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபிராட்மேன் வரலாறு: டான் பிராட் மேன் நினைவு தினம் இன்று
Next articleமக்கள் என்னை கோமாளியாகவே பார்க்கட்டும் – புகழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here