மே 3ம் தேதிக்குப் பிறகு கரோனா வைரஸ் வானத்திற்கு செல்லுமா என்ன? நடிகை ஸ்ரீ ரெட்டி ஊரடங்கை விமர்சித்துள்ளார்.
சீனாவில் உருவான கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது.
குறிப்பாக அமெரிக்காவில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதித்துள்ளனர். அங்கு 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த வைரசால் இறந்துள்ளனர்.
பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகள் பல இழப்புகளை சந்தித்து வருகிறது.
இந்த கரோனா வைரஸுக்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. தற்போது இந்தியாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதித்துள்ளனர். 300க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர்.
பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் வெளியிடும்படி அறிவுறுத்தினார்.
பின்பு அந்த 21 நாள், 40 நாளாக மாற்றப்பட்டது. மே 3ஆம் தேதி வரை மக்கள் ஊரடங்கு பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தற்போது சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி சமூகவலைதளத்தில் பிரதமரின் இந்த ஊரடங்கு விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
“மே 3ற்கு பிறகு கரோனா வானத்திற்கு செல்லுமா என்ன?? முதலில் ஏழை மக்களைக் காப்பாற்ற நினைத்துப் பாருங்கள்.. குறைந்தபட்சம் உணவுப் பொருட்கள் வாங்கவாவது பணத்தை வழங்குங்கள். ஒருவேளை மே 3ஆம் தேதிக்கு பிறகு கரோனா வைரஸ் ஒரே ஒரு நபருக்கு பரவி, அது இலட்சக்கணக்கான மக்களுக்கு மீண்டும் பரவினால் என்ன செய்வது..?”
என்று பதிவிட்டு பிரதமரை விமர்சித்துள்ளார்