கரோனா வைரஸ் காரணமாக அமெரிக்கா பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.
இதை மீட்டெடுக்கும் விதமாக அமெரிக்க பொருளாதார புத்தாக மீட்டெழுச்சி தொழில்துறை குழு (Great American Economic Revival Industry Group) என்ற ஒன்றை உருவாக்கியுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.
சீனாவில் உருவான கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் அமெரிக்காவை புரட்டிப் போட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையிலும் சரி, இறப்பு எண்ணிக்கையிலும் சரி அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது.
அமெரிக்காவில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பார்த்துள்ளனர். 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
டொனால்ட் ட்ரம்ப் என்ன செய்வதறியாமல் திணறி வருகிறார். அமெரிக்காவின் பொருளாதாரம் அதி பாதாளத்திற்கு சென்றுவிட்டது.
தற்போது அதை மீட்டெடுக்கும் விதமாக ஒரு குழு ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்த குழுவிற்கு அமெரிக்க பொருளாதார மீட்டெழுச்சி தொழில்துறை குழு பெயர் வைத்துள்ளார்.
இந்த குழுவில் ஆறு இந்திய-அமெரிக்கர்கள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யன் நாதெள்ளா உட்பட 6 அமெரிக்க கார்ப்பரேட் கம்பெனிகளின் இந்திய தலைவர்களை நினைத்துள்ளார்.
இவர்கள் டிரம்புக்கு பொருளாதார புத்துணர்ச்சியான ஆலோசனைகளை வழங்குவார்கள்.
இந்தக் குழுவில் 200 பலதரப்பட்ட அமெரிக்க வர்த்தக தொழில்துறை அதிபர்களை ட்ரம்ப் சேர்த்துள்ளார்.
“இவர்கள்தான் இந்த பெயர்கள், இவர்கள்தான் புத்திசாலியானவர்கள், பிரகாசமானவர்கள், இவர்கள் தான் நமக்கு புதிய யோசனை வழங்க உள்ளனர்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த மகா கார்ப்பரேட் குழுவில் சுந்தர் பிச்சை சத்யா, நாதெள்ளா, அரவிந்த் கிருஷ்ணா, சஞ்சய் மெஹ்ரோத்ரா ஆகிய இந்தியர்கள் மற்றும் ஆப்பிள் டிம் குக், ஆரக்கிள் லாரி எலிசன், பேஸ் புக் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோர் தொழில்நுட்ப ஆலோசனை குழுவில் உள்ளனர்.