Home Latest News Tamil மும்பை இந்தியன்ஸின் கிரிக்கெட் ஃபீவர் தொடர்: நெட்ப்லிக்ஸ்

மும்பை இந்தியன்ஸின் கிரிக்கெட் ஃபீவர் தொடர்: நெட்ப்லிக்ஸ்

442
0
மும்பை இந்தியன்ஸின்

மும்பை இந்தியன்ஸின் கிரிக்கெட் ஃபீவர் தொடர்: நெட்ப்லிக்ஸ்

ஐ‌பி‌எல் தொடரில் மூன்று கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் 8 எபிசோட்கள் கொண்ட டாக்குமெண்டரி தொடர் நெட்ப்லிக்ஸில் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த நெட்ப்லிக்ஸ் நிறுவனம் இந்தியத் தயாரிப்புகளில் முதலீடு செய்ய மிகவும் ஆவலாக இருக்கிறது. மார்ச் மாதத்திலயே மூன்று இந்தியத் தயாரிப்பு தொடர்கள் வெளியாகின்றன.

முக்கிய கதாப்பாத்திரங்களாக கேப்டன் ரோஹித் சர்மா, லேஜெண்ட் சச்சின் டெண்டுல்கர், தலைமை பயிற்சியாளர் மஹேல ஜெயவர்தனே காட்டப்படுகின்றனர்.

அம்பானி குரூப்க்கு சொந்தமான மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக செயல்படக் காரணம், அணியின் வெற்றிப்பாதை, மூன்று முறை சாம்பியன் வென்றவை இவை அனைத்தும் படமாக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் எடுக்கும் முதல் ஸ்போர்ட்ஸ் டாக்குமெண்டரி இதுவாகும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுவது ஐ‌பி‌எல் போட்டிகளிலேயே இந்தியா பாகிஸ்தான் போல மிகவும் பரபரப்பான ஒரு போட்டி ஆகும்.

வருகிற 23-ஆம் தேதி ஐ‌பி‌எல் போட்டி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை பெங்களூர் அணிகள் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleமுதல் ஒரு நாள் போட்டி இந்தியா வெற்றி: தோனி, கேதார் அரைசதம்
Next articleஎலோன் மஸ்குடன் சேர்ந்து என்னை ஏமாற்றி விட்டாள்: ஜானி டெப்
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here