Home சினிமா கோலிவுட் பிளாக்பஸ்டர் ஹிட்டுக்காக 5ஆவது முறையாக வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி?

பிளாக்பஸ்டர் ஹிட்டுக்காக 5ஆவது முறையாக வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி?

302
0
Dhanush Vetrimaaran Team

Dhanush; மீண்டும் வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி? தனுஷ் மீண்டும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் புதிய படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது, நடிகர் என்பதையும் தாண்டி, இயக்குநர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர் என்று பல திறமைகளை கொண்டுள்ளார்.

அண்மையில், தனுஷ் நடிப்பில் அசுரன், எனை நோக்கி பாயும் தோட்டா, பட்டாஸ் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியானது.

இதில், அசுரன் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியிருந்தார்.

அசுரன் படத்திற்கு முன்னதாக வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை ஆகிய 3 படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது. அதோடு, பாக்ஸ் ஆபிஸ் வசூலும் குவித்தது.

இந்த நிலையில், தற்போது 5ஆவது முறையாக வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் புதிய படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா லாக்டவுன் முடிந்ததும், வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் வாடிவாசல் படம் உருவாக இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

தற்போது வாடிவாசல் படத்திற்கு முன்னதாக தனுஷின் புதிய படத்தை எடுத்து முடிக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகள் அனைத்தும் முடிந்து இறுதிகட்டத்தில் உள்ளதாகவும், ஆனால், இந்தப் படம் வட சென்னை படத்தின் 2 ஆம் பாகம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்க உள்ள படத்தையும் எல்ரெட் குமார் தான் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை வெளி மாநிலங்களில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால், கொரோனா காரணமாக தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க முடியாத நிலையில், வெற்றிமாறன் தனுஷ் படத்தை கையிலெடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

Previous articleமுறுக்கு மீசையில் கலக்கிய தனுஷ்: ரகிட ரகிட ரகிட லிரிக் வீடியோ வெளியீடு!
Next articleமத்திய அரசின் ‘EIA 2020’ வரைவு: கார்த்தி எதிர்ப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here