Home சினிமா கோலிவுட் முறுக்கு மீசையில் கலக்கிய தனுஷ்: ரகிட ரகிட ரகிட லிரிக் வீடியோ வெளியீடு!

முறுக்கு மீசையில் கலக்கிய தனுஷ்: ரகிட ரகிட ரகிட லிரிக் வீடியோ வெளியீடு!

299
0
Rakita Rakita Rakita Lyric Video

Rakita Rakita Rakita Lyric Video; தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் முதல் சிங்கிள் டிராக் ரகிட ரகிட ரகிட லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரகிட ரகிட ரகிட லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான தனுஷ், காதல் கொண்டேன், திருடா திருடி, சுள்ளான், புதுக்கோட்டை, யாரடி நீ மோகினி, மாரி, மாரி 2 ஆகிய படங்களில் வரிசையாக நடித்துள்ளார்.

அண்மையில், அசுரன், பட்டாஸ் ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில், தற்போது ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் உடன் இணைந்து சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லெட்சுமி, கலையரசன், சின்னி ஜெயந்த் ஆகியோர் உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் கடந்த மே மாதம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக, படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் டிராக் ரகிட ரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தப் பாடலில் தனுஷ் வேஷ்டி சட்டையுடனும், பேட்ட ரஜினியைப் போன்று மீசை வைத்திருப்பது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் 37 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ரகிட ரகிட ரகிட லிரிக் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே தனுஷின் கர்ணன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் காலையில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Rakita Rakita Rakita Lyric Video:

Previous articleமதுரையில் தனுஷின் Atrangi Re படத்தின் படப்பிடிப்பு!
Next articleபிளாக்பஸ்டர் ஹிட்டுக்காக 5ஆவது முறையாக வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here