ஷாருக்கான்-அட்லி கூட்டணி. இதுக்கு ஒரு எண்டே இல்லையா.:? கடந்த சில மாதங்களாக கோலிவுட்டை சுற்றி சுற்றி வரும் செய்தீதீ… இது..
விஜய்யுடன் மூன்று படம்
தொடர்ந்து தமிழ் சினிமாவில் 4 வெற்றி படங்களை இயக்கியவர் அட்லி. அவரது கதைகள் பற்றிய பிரச்சனைகள் பின் தொடர்ந்தாலும் படங்களின் வெற்றி அதனை மறைத்துவிடுகின்றன.
விஜய் கதாநாயகனாக நடித்த மூன்று படங்களுமே ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
ஷாருக்கான்-அட்லி கூட்டணி
அட்லியின் அடுத்த படங்கள் குறித்த வதந்திகள் வந்த வண்ணம் இருக்க, ஷாருக்கான் உடன் அமர்ந்து கிரிக்கெட் மேட்ச் பார்த்தார் அட்லி.
அவரது அடுத்த இலக்கு பாலிவுட் என கணிக்க துவங்கினர் ரசிகர்கள். ஷாருக்கான் அவருக்கு தேவையான கதையை தயார் செய்ய சொன்னதாக செய்திகள் பரவியது.
இதற்கிடையில் ரகசியமாக அட்லி தனது அடுத்த படத்துக்கான கதை விவாத வேலையைத் துவங்கினார்.
ஆனால், அட்லி சொன்ன கதை ஷாருக்கானுக்கு பிடிக்கவில்லை. இதனால் தனது உதவி இயக்குனர்கள் குழுவை முடுக்கி விட்டு இருக்கிறார் அட்லி.
மறுபடியும் கதை இறுதி வடிவத்தை எட்ட ஷாருக்கான் க்ரீன் சிக்னல் காண்பித்து இருக்கிறார் எனத் தகவல் கசிந்துள்ளது.
ஒரே மாதத்தில் கூட்டணி. பின்பு கூட்டணி முறிவு. பிறகு கூட்டணி, அதன்பிறகு கூட்டணி முறிவு என பல முறை அட்லி பற்றிய செய்தீ.. வதந்தியாய் பரவிய வண்ணம் உள்ளது.
அட்லி தன்னுடைய அடுத்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இதற்கு ஒரு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்.