Home கல்வி டிஎன்பிஎஸ்சி குரூப்-1: TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப்-1: TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு

409
0
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 வேலைவாய்ப்பு அறிவிப்பு Tnpsc

டிஎன்பிஎஸ்சி குரூப்- 1: TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு. தமிழ்நாடு அரசு மற்றும் குடிமையியல் துறை இணைந்து நடத்தும் குரூப்-1 தேர்விற்கான அறிவிப்பு வெளியானது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அடுத்த அறிவிப்பு வெளியானது. வரும் ஏப்ரல் 5-ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என தனது அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப்-1

தமிழ்நாடு அரசு மற்றும் குடிமையியல் துறை இணைந்து நடத்தும் குரூப்-1 தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நேற்று 20-ம் தேதி வெளியிட்டுள்ளது.

அதில் தேர்வுக்கான விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, வயதுவரம்பு, மதிப்பெண்கள், தேர்வு நடைபெறும் நாள் போன்றவற்றை வெளியிட்டுள்ளது மற்றும் இணையத்தில் விண்ணப்பிக்க இணையதள முகவரியையும் வெளியிட்டுள்ளது.

பணி விவரம்

மொத்த பணியிடங்களாக 69 இடங்கள் அறிவிக்கப்பட்டது. இதில் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், உதவி காவல் ஆணையர், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர், தமிழ்நாடு கிராமப்புற வளர்ச்சித்துறையின் உதவி இயக்குனர் மற்றும் தீ மீட்பு பணியின் மாவட்ட நிர்வாகி போன்றவை அடங்கும். இதற்கு குறைந்த பட்ச வயது வரம்பு 21.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி நாள்

வரும் ஏப்ரல் 5ம் தேதி நடைபெற உள்ள முதல்நிலை எழுத்துத் தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் பிப்ரவரி-19 ஆகும்.

இதற்கான விண்ணப்ப படிவத்தினை tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான கட்டண விவரம் அதிலேயே கொடுக்கப்பட்டுள்ளது.

மதிப்பெண்கள்

இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு கட்டாயம் தமிழ்மொழி தெரிந்திருக்க வேண்டும்.

முதல்நிலைத் தேர்வில் கேள்விகள் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். முதன்மைத் தேர்வில் 750 மதிப்பெண்களுக்கும், நேர்காணலில் 100 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்படும்.

TNPSC கேள்வி தாள்

பொதுவாக கேள்விகள் மூன்று பிரிவின் கீழ் கேட்கப்படும். பொதுஅறிவு, அறிவுத்திறன், திறனாய்வு சோதனைக்கேள்விகள். பொதுஅறிவுக் கேள்விகள் தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் இடம்பெறும்.

தேர்வு இறுதிக்கட்ட முடிவு

இறுதியாக தேர்வு செய்யப்பட்ட தேர்வானவர்களின் விவரம் முதன்மை மற்றும் நேர்காணலில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்களாகவே இருக்கும்.

முதல்நிலை தேர்வு என்பது முதன்மைத்தேர்விற்கு தேர்ந்தெடுக்க மட்டுமே.

Previous articleஷாருக்கான்-அட்லி: இதுக்கு ஒரு எண்டே இல்லையா
Next articleகுஞ்சாலி மரைக்கார்: வரலாற்றுப் படத்தில் கீர்த்தி சுரேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here