Home சினிமா கோலிவுட் ரசிகர்களுக்கு உதவி செய்த விஜய்: பாராட்டு தெரிவித்த சச்சின் இயக்குநர் ஜான் மகேந்திரன்!

ரசிகர்களுக்கு உதவி செய்த விஜய்: பாராட்டு தெரிவித்த சச்சின் இயக்குநர் ஜான் மகேந்திரன்!

322
0
Master Vijay

ரசிகர்களுக்கு உதவி செய்த விஜய்: வள்ளல் தளபதி விஜய்! தனது ரசிகர்களுக்கு 5000 ரூபாய் அனுப்பி உதவி செய்திருப்பதற்கு சச்சின் பட இயக்குநர் ஜான் மகேந்திரன், தளபதி விஜய்க்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

ரசிகர்களுக்கு உதவி செய்த, விஜய்க்கு இயக்குநர் ஜான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், தளபதி விஜய் ரூ.1.3 கோடி வரையில் நிதியுதவி கொடுத்துள்ளார்.

மேலும், ரசிகர்களுக்கு என்று ரூ.50 லட்சம் வரையில் நிதியுதவி அளித்துள்ளார் என்றும் கூறப்பட்டது. மொத்தமாக ரூ.1.8 கோடி வரையில் விஜய் நிதியுதவி அளித்து உதவி செய்துள்ளார்.

இந்த நிலையில், தான் செய்யும் உதவி தனது ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக ரசிகர்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.5000 வீதம் நிதியுதவி அளித்துள்ளார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக வறுமையில் கஷ்டப்படும் ரசிகர்களை கண்டறிந்து அவர்களுக்கு தலா ரூ.5000 அனுப்பி வைத்துள்ளார். Vijay Charitable Trust மூலமாக இந்த தொகை அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து, விஜய் ரசிகர்கள் அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதுவரை, 2 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களுக்கு விஜய் பணம் அனுப்பி வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவிட்டதோடு, வள்ளல் தளபதி விஜய் என்று டுவிட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர். இந்த நிலையில், விஜய்யின் சச்சின் படத்தை இயக்கிய் ஜான் மகேந்திரன் விஜய்க்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

தெறி படத்தில் வில்லனாக நடித்த இயக்குனர் மகேந்திரனின் மகன் தான் ஜான் என்பது குறிப்பிடத்தக்கது.

சபாஷ் விஜய்…உயிர் போயி கொண்டிருக்கும் நேரத்திலும் மத, ஜாதி , வடக்கன், தெர்க்கன் என்று வீண் துவேஷங்கள் பலர் செய்து கொண்டிருக்கும் பொழுது, அமைதியாக, உங்களை நேசிப்பவர்களுக்கு நீங்கள் நேசக்கரம் நீட்டுவதை பார்க்கும் பொழுது…மனதார இறுக அணைத்து வாழ்த்துகள் விஜய் என்று பதிவிட்டுள்ளார்.

SOURCER SIVAKUMAR
Previous articleஆவின் பால் & பால் பொருட்களை டோர் டெலிவெரி செய்ய தமிழக அரசு முடிவு
Next articleஇந்தியாவில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டோர் மட்டும் 10 லட்சம் பேர் வெளியான புள்ளி விவரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here