Friendship First Single Superstar Anthem; யூடியூப்பில் நம்பர் ஒன் டிரெண்டிங்கில் சூப்பர்ஸ்டார் ஆந்தம் பாடல்! பிரண்ட்ஷிப் படத்தில் இடம்பெற்றுள்ள சூப்பர்ஸ்டார் ஆந்தம் பாடல் யூடியூப்பில் டிரெண்டிங்கில் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது.
லோஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ட்ஷிப் படத்தில் சூப்பர்ஸ்டார் ஆந்தம் பாடல் யூடியூப்பில் டிரெண்டிங்கில் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது
இயக்குநர் ஜான் பால்ராஜ் மற்றும் சூர்யா ஆகியோரது இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் பிரண்ட்ஷிப்.
இந்தப் படத்தின், மூலம் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.
இதே போன்று கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான லோஸ்லியா ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளார். இதுவே லோஸ்லியாவின் முதல் படம்.
இந்தப் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் மற்றும் நகைச்சுவை நடிகர் சதீஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு டிஎம் உதய குமார் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், பிரண்ட்ஷிப் படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் டிராக் சூப்பர்ஸ்டார் ஆந்தம் பாடல் லிரிக் வீடியோ வெளியாகி யூடியூப்பில் டிரெண்டிங்கில் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது.
இந்தப் பாடலை சிம்பு பாடியுள்ளார். ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு வரிகளும் ரஜினியை பெருமைப்படுத்தும் வகையிலும், அவருக்கு மரியாதை செய்யும் வகையிலும் பாராட்டும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.