Home சினிமா கோலிவுட் GV Prakash: ஜீ.வி.பிரகாஷும் இயக்குனர்களும்!

GV Prakash: ஜீ.வி.பிரகாஷும் இயக்குனர்களும்!

456
0
GV Prakash and Gautham Menon
ஜீ.வி.பிரகாஷும் இயக்குனர்களும்!
இசையமைப்பாளராக தனது முதல் திரைப்படத்திலேயே திரையுலகத்தாலும் சரி மக்களாலும் சரி கவணிக்கப்பட்டவர்,
ஜி.வி.பிரகாஷ்குமார். 
ஜி.வி. பிரகாஷ்குமார் அவர்களின் இயக்குனர் காம்போவை பற்றிய சிறு பார்வைதான் இந்த கட்டுரை.
ஜி.வி.பிரகாஷ்-வசந்தபாலன்
ஜி.வி.பிரகாஷ் அவர்கள் இசையமைப்பாளராக அறிமுகமானது வசந்தபாலன் அவர்கள் இயக்கிய  வெயில் திரைப்படத்தில்தான். அப்படத்தில் வரும் ‘வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி ‘என்ற பாடல் பலரின் நாஸ்டாலாஜியாக்களை தூண்டிவிட்டும் ‘உருகுதே மருகுதே’ பாடல் மக்களை கவர்ந்தும் ஜி.வி.பிராகாஷ்குமாரின் மீது கவணிப்பை ஏற்படுத்தியது.
அதன் பிறகும்  தனது இசையால் தன் மீதான மக்களின் கவணத்தையும் திரையுலகின் கவணத்தையும் சிதறவிடாமல் தொடர்ந்து  பெற்றார், பெற்றுக்கொண்டுமிருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் மற்றும் வசந்தபாலன் கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்த வெயில் மற்றும் அங்காடித்தெருவின் பட பாடல்கள் நம்மை ஆட்கொள்ளும் அளவிற்கு இருந்தவை. அங்காடித்தெருவில் வரும் ‘உன் பெயரை சொல்லும்போதே’ பாடலுக்கென்று தனி ரசிக பட்டாளமிருக்கிறது. இந்நிலையில் இவர்கள் கூட்டணியில் வரவிருக்கும் ஜெயில் திரைப்படத்திற்கான பாடல்களில் மீது மக்களுக்கான எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது. ஜெயிலில் இருந்து வெளியான காத்தோடு காத்தானேன் பாடலும் நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜி.வி.பிரகாஷ் – A.L.விஜய்
இவர்களின் கூட்டணி அனைவராலும் நம்பப்படும் கூட்டணியாகவே திகழ்கிறது. இவர்கள் கூட்டணியில் வந்த பெறும்பாலான பாடல்கள் ஹிட்லிஸ்டில்தான் சேர்ந்திருக்கிறது. மதராசப்பட்டினம் – பூக்கள் பூக்கும் தருணம்,
கிரிடம்- அக்கம் பக்கம்,
சைவம்- அழகு,
இது என்ன மாயம்- இரவாக நீ,
தாண்டவம்- ஒரு பாதி கதவு,
தலைவா- யார் இந்த சாலையோரம்,
தெய்வத்திருமகள்- தந்தையின் தாலாட்டு
என படங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு பாடலையாவது இதயம் தொட்ட பாடலென நாம் நினைவு கூர்ந்து விடலாம்.
ஜி.வி.பிரகாஷ்- வெற்றிமாறன்
பாடல்களுக்கு மட்டுமல்லாது கொளுத்தும் பின்னனி இசையையும் இவர் கூட்டணி படங்களில் நாம் கேட்கலாம். பொல்லாதவன் சமயத்தில் வந்த பைக்கிற்கான BGM இப்போது வரை பலரின் பைக்குகளில் ஹார்ன்-டோனாக உள்ளது. பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, அசுரன் என அனைத்துப்படங்களிலுமே பின்னனி இசை தெறித்திருக்கும். பாடல்களையும் குறைத்து மதிப்பீடல் ஆகாது. ஆடுகளம் திரைப்படத்தில் வரும் ‘ஒத்த சொல்லலால’ பாடல் இன்றளவும் பலரால் கொண்டாடப்பட்டுத்தான் இருக்கிறது. படத்திற்கு ஒரு பாடல் சொல்ல வேண்டுமென்றால்
மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம் என்ற மெலடியும், படிச்சு பார்த்த ஏறவில்லை என்ற குத்தாட்ட பாடலையும் கொண்டிருக்கிறது பொல்லாதவன். ‘யாத்தே யாத்தே’ என்ற மெலடியையும், ‘வாழ்க்கை ஒரு போர்க்களம்’ என்ற எழுச்சி பாடலையும் ஆடுகளம் தன்னுள் வைத்திருக்கிறது. அசுரன் திரைப்படத்தில் ‘வா அசுரா வா’ என்ற பாடலில் திரைப்படத்தில் அக்காட்சியின் கொதிப்பையும், ‘எள்ளு வய பூக்கலயே’ பாடலின் ஒரு தாயின்  தவிப்பையும் நாம் அப்படியே உணர்வதற்கான காரணங்களில் மிக முக்கியமானவர் ஜி.வி.பிரகாஷ் அவர்கள். வெற்றிமாறன் தயாரித்த திரைப்படமான உதயம் NH4, காக்கா முட்டை, லென்ஸ் போன்ற திரைப்படங்களுக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார்தான் இசையமைப்பாளர்.
ஜி.வி.பிரகாஷ்-அட்லீ
அட்லியின் திரைப்படங்களான இராஜா இராணி மற்றும் தெறி படத்திற்கு இசையமைத்தவர் இவர்தான். இராஜா இராணி திரைப்படத்திற்கு பெரிய அறிமுகமாக இருந்தது படத்தின் பாடல்கள். பலவிதமான வேரியஷன்கள் பொருந்திய பாடல்களை நாம் இராஜா இராணியிலும், தெறியிலும் காணலாம். இப்போதும் fresh ஆகவே இருக்கிறது இவ்விரு படங்களின் ஆல்பமும்.
ஜி.வி.பிரகாஷ்-செல்வராகவன்
செல்வராகவனும் ஜி.வி.பிரகாஷும் கூட்டணி அமைத்த இரண்டு படங்களும் ஜி.வி அவர்களின் இசைப்பயணத்தில் மிக முக்கியமானவை. ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வரும் celebration of life என்ற பின்னனி இசை நம்மை சிலிர்க்க வைக்கும். மயக்கம் என்ன திரைப்படத்தில் வரும் அனைத்து பாடல்களுமே ஹிட் லிஸ்ட்தான். இருப்பினும், ‘பிறை தேடும் இரவிலே’ பாடல் பலருக்கு நெருக்கமாக இருக்கிறது.
Previous articleபுதுச்சேரி பல்கலைகழகம் வியாழக்கிழமை 2020-2021ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்களை அனுப்ப ஆன்லைன் மூலம் அனுமதி
Next articleRadheShyam: பிரபாஸ்20 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here