Home சினிமா கோலிவுட் RadheShyam: பிரபாஸ்20 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

RadheShyam: பிரபாஸ்20 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

279
0
Prabhas20FirstLook

Prabhas20FirstLook; பிரபாஸ்20 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! பிரபாஸ் 20 ஆவது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பிரபாஸ் நடிக்கும் 20ஆவது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சாஹோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ் தனது 20ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இத்தாலி மற்றும் அதனை சுற்றி நடக்கும் காதல் கதையை மையப்படுத்தி பிரபாஸ்20 படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து முரளி சர்மா, சச்சின் கடேகர், பிரியதர்ஷி, சத்யன், பாக்யஸ்ரீ ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

முதலில் இப்படத்தின் சேஸிங் காட்சி படமாக்கப்பட்டது. இதையடுத்து, ஜியார்ஜியாவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடந்துள்ளது.

தற்போது கொரோனா காரணமாக அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆதால், இந்தப் படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா முற்றிலும் சரியான பிறகு படப்பிடிப்பிற்கு அனுமதி கிடைத்த உடன் பிரபாஸ்20 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படும் என்று ஏற்கனவே படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பிரபாஸ்20 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் பிரபாஸ்20 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அதன்படி, படத்திற்கு ராதேஷ்யாம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் கட்டியணைத்து நிற்பது போன்று புகைப்படம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleGV Prakash: ஜீ.வி.பிரகாஷும் இயக்குனர்களும்!
Next articleஜெய்க்கு ஜோடியான சின்னத்திரை நடிகை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here