Home சினிமா கோலிவுட் Money Heist Professor: பொருத்தமான நடிகர் விஜய் மட்டும் தாங்க

Money Heist Professor: பொருத்தமான நடிகர் விஜய் மட்டும் தாங்க

2680
0
Money Heist Professor விஜய்

Money Heist Professor: பொருத்தமான நடிகர் விஜய் மட்டும் தாங்க என ஸ்பானிஸ் வெப் சீரியஸ் “மணி ஹெய்ஸ்ட்” இயக்குனர் அலெக்ஸ் ரெட்ரிக்கோ கூறியுள்ளார்.

மணி ஹெய்ஸ்ட் என்ற வெப்சீரியஸ் நெட்பிளிக்ஸ் டிஜிட்டல் பிளாட்பார்மில் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 4 சீசன் வெளியிடப்பட்டுள்ளது.

இது ஸ்பானிஸ் மொழியில் எடுக்கப்பட்டு உலக அளவில் ஹிட் அடித்த வெப்சீரியஸ். இந்தியாவில் ஊரடங்கு நேரத்தில் அதிகமானோரால் பார்க்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வங்கியாக சென்று கொள்ளை அடித்துவிட்டு அங்கு இருந்து தப்பிப்பது தான் இந்த வெப்சீரியஸ் ஒன்லைன் ஸ்டோரி.

இதில் முக்கியக் கதாப்பாத்திரம் புரப்பசர் என்ற கொள்ளைக்கூட்ட தலைவன் கதாப்பாத்திரம். அல்வரோ மோர்டி என்ற ஸ்பானிஷ் நடிகர் இந்த கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்.

சமீபத்தில் தமிழ் இணையதளம் ஒன்று மணி ஹெய்ஸ்ட் இயக்குனர் அலெக்சை வீடியோ கால் மூலம் பேட்டி எடுத்தது.

Money Heist Professor

அப்போது அவரிடம், “விஜய், மகேஷ் பாபு, ஷாருக்கான், அஜித், சூர்யா, ரன்வீர் கபூர்” என 6 நடிகர்கள் புகைப்படம் காண்பிக்கப்பட்டது. இதில் எந்த நடிகர் ப்ரொபசர் கதாப்பாத்திரத்திற்கு சரியாக இருப்பார் எனக் கேள்வி கேட்கப்பட்டது.

உடனே சட்டென யோசிக்காமல் முதலில் இருப்பவர் தான் இதற்கு சரியாக இருப்பார் எனக் கூறினார் அலெக்ஸ். அவருக்கு விஜய் என்ற பெயர் கூட தெரியவில்லை.

முகச்சாயல் அடிப்படையில் புரப்பசர் கதாப்பாத்திரத்திற்கு விஜய் சரியாக  இருப்பார் என யோசிக்காமல் சட்டென ஒரே நொடியில் கூறிவிட்டார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மாஸ்டர் படத்திலும் நடிகர் விஜய் புரப்பசர் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. வாத்தி கம்மிங் பாடல் ஏற்கனவே இணையத்தில் ஹிட் அடித்து உள்ளது.

மேலும், மணி ஹெய்ஸ்ட் இயக்குனர் வேறு விஜய்க்கு புரப்பசர் கேரக்டர் சூட் ஆகும் எனக் கூறியுள்ளார். அப்போ மாஸ்டர் தாறுமாறு தான்…

Previous articleகதையல்ல உண்மை: பெண்ணின் பிறப்புறுப்பை அம்மனாக வணங்கும் அதிசய கோவில்!
Next articleபோலி ஃபேஸ்புக் பக்கம்: ரசிகர்களை எச்சரித்த நடிகை பாவனா!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here