கோவையைச் சேர்ந்தவரின் கதைக்கு ஆஸ்கர் விருதா?
ஒவ்வொரு முறையும் ஆஸ்கர் விருது விழா நடக்கும்போது தமிழ் திரைப்படத்திற்கு கிடைத்து விடாதா? என ஓவ்வொரு ரசிகரின் கண்களிலும் ஏக்கம் தெரியும்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விருதை வென்றாலும் அந்தப் படம் இந்தியத் தயாரிப்பு இல்லை.
இன்னும் சில மணி நேரங்களில் 91-வது ஆஸ்கர் விருது விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் நடைபெற உள்ளது.
இந்திய நேரப்படி அதிகாலை இந்த விழா துவங்கும். தி ஃபேவரைட், ரோமா ஆகிய இரண்டு படங்களும் தலா 10 விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ளித்திரை படங்களுடன், ‘பீரியட்: எண்ட் ஆப் சென்டென்ஸ்’ என்ற ஆவணப்படமும் பரிந்துரைப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆவணப்படம், கோவையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் ஏழைப் பெண்களுக்காக மலிவுவிலை நாப்கின் தயாரித்த உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே கதை, அக்ஷய் குமார் நடிப்பில் பேட்மேன் (padman) என்ற பெயரில் இந்தியில் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது.