பொங்கலுக்கும் இல்லையென்றால் அடுத்து OTT ரிலீஸ் தான்-மாஸ்டர் அப்டேட். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது.
பொதுமுடக்கத்தால் தியேட்டர் மற்றும் மால்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் பொன்மகள் வந்தாள், பென்குயின் உட்டிட்ட திரைப்படங்கள் நேரடியாக OTT தளத்தில் வெளியிடப்பட்டன.
முன்னணி நடிகரான விஜயின் மாஸ்டர் திரைப்படம் ஜூன் 22-ம் தேதி விஜயின் பிறந்தநாளன்று திரையிடப்படும் என முடிவு செய்யப்பட நிலையில் தொடர்ந்து நீடிக்கும் ஊரடங்கு காரணமாக செயல்படுத்த முடியவில்லை.
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். விஜய் சேதுபதி இந்த படத்தில் தளபதிக்கு வில்லனாக நடித்துள்ளார்.
தற்போது இந்த திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிடலாம் என முடிவெடுத்து சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்களிடம் கூறியுள்ளனர் படக்குழுவினர். தியேட்டரில் முன்பு போல் கூட்டம் இருக்காது.
இதனால் மீண்டும் 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடலாம் என முடிவுசெய்யப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பிறகும் திரைப்படம் வெளியாவது தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டால் உடனடியாக OTT தளத்தில் வெளியிடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தளபதி விஜய்யும் பொங்கலுக்கு பிறகு பட வெளியீடு தள்ளி சென்றால் சரியாக இருக்காது என்பதால் அதன்பிறகு OTT தளங்களில் வெளியிடுவதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.
இதனால் தற்போது அமேசான் ப்ரைம் மற்றும் நெட்ப்ளிக்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் 200 கோடிக்கும் மேல் பேரம் நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.