இர்ஃபான் கான் மரணம்; பத்ம ஸ்ரீ, தேசிய விருதுகள் வென்ற மகா நடிகர், இர்ஃபான் கான் தன்னுடைய 54 வயதில் பெருங்குடல் புற்று நோயால் உயிரழந்தார்.
புது தில்லி: பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானுக்கு நியூரோ எண்டோகிரைன் கட்டி இருப்பது 2018-ம் ஆண்டு கண்டறியப்பட்ட நிலையில், அவர் மும்பையின் கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நடிகரின் செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தினார்.
53 வயதான நடிகரின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது, இதன் விளைவாக அவருக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. இவருடன் அவரது மனைவி சுதாபா மற்றும் மகன்களும் உள்ளனர்.
இதனிடையே சற்று முன் சிகிச்சை பலனின்றி உயிரழந்தார் என அதிகாரப்பூர்வக ட்விட்டர் பக்கங்களில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவின் திரை உலகில் இவருடைய பங்களிப்பு வியக்கத்தக்கது. பல ஹாலிவுட் படங்களும் நடித்துள்ளார். மேலும் இவர் பத்மா ஸ்ரீ மற்றும் தேசிய விருதுகள் பெற்றுள்ளார்.
கரீனா கபூர் மற்றும் ராதிகா மதன் இணைந்து நடித்த ஆங்ரேஸி மீடியம் , நியூரோ எண்டோகிரைன் கட்டி இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் இர்பான் கானின் முதல் படம்.
இவர் நடித்த ஸ்லம் டாக் மில்லியனர் பல ஆஸ்கார் விருதுகளை வென்றது. ஜூராசிக் வேர்ல்டு, அமேசிங் ஸ்பைடர் மேன் மற்றும் லைஃப் ஆஃப் பை ஆகிய ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.