Home சினிமா இந்திய சினிமா Irrfan khan: இர்ஃபான் கானுக்கு ஒரு மடல்!

Irrfan khan: இர்ஃபான் கானுக்கு ஒரு மடல்!

538
0

Irrfan khan: இர்பான்கானுக்கு இவன் எழுதும் சிறு மடல்அன்பின் இர்ஃபான் கானுக்கு, இவன் முதலில் உங்களை கண்டது ஜீராசிக் வோர்ல்டில்தான். நீங்கள் இந்திய நடிகர் என்றெல்லாம் கூட அப்போது இவனுக்கு தெரியாது.

போக போக, வளர வளரத்தான் நீங்கள் இந்திய நடிகர் என்றும், இந்தியன் என்றும் இவனுக்கு தெரியும். இதை நான் சொல்லும்போதே பலருக்கு நம்பும்படியாக இருக்காது என்பதையும் இவனறிவான்.

ஆனால் இதுதான் உண்மை. தமிழ்ப்படத்தையும், தமிழில் டப் செய்யப்பட்ட விந்தையான திரைப்படங்களை மட்டுமே இவன் பார்த்த வயது அது.

சந்திப்பு

நீங்கள் இந்திய நடிகர் என்று தெரிந்த பின்பும் கூட நீங்களும் இவனும் சந்தித்துகொண்டதே இல்லை.

நீங்களும் இவனும் முதன்முதலில் சந்தித்துக்கொண்டது இவனது பள்ளி பருவத்தின் இறுதியில்தான்.

அப்போதும் இவன் உங்களை சந்திப்பதற்காக வரவில்லை, தனியாக புலியுடன் கடலில் பயணம் செய்யும் பாலகனை காணத்தான் வந்திருந்தான்.

உங்களுடானான இவனுக்கு ஏற்பட்ட சந்திப்பு என்பது எதிர்பாராதது. எதிர்பாராத சந்திப்புகள் விசித்திரமானது என்பார்கள் அப்படித்தான் அந்த சந்திப்பு நிகழ்ந்தது.

Life of pi-ல் இவன் உங்களை கவணித்தான் என்று வெறுமனே சொன்னால் அது முழுமையடையாது. நீங்கள் இவனை கவணிக்க வைத்தீர்கள்.

இவனுக்கு தெரியும் life of pi-ல் இவன் வியக்குமளவிற்கு என்ன இருந்தது என்று கேள்வி பலர் மனதில் எழுமென்று.

நீங்களும் குரலும்

அந்த பள்ளியின் இறுதி பருவத்தில் நடந்துக்கொண்டிருந்த இவனுக்கு இர்ஃபான் காணின் அந்த குரல்தான் முதலில் பிடித்திருந்தது.

வசனங்கள் குறைவென்றாலும் அவ்வப்போது வந்துச்செல்லும் அந்த குரலில் இவன் எதைக்கண்டான் என்று இன்னும் இவன் அறியவில்லை. ஆங்கிலம் வேறு இவன் சற்றே அறிவான். இருப்பினும் அத்திரைப்படத்தை பார்த்து தீர்த்தான்.

லைஃப் ஆஃப் பை-யில் பல வசனங்கள் நன்றாக இருக்கும். அதையிவன் அந்த வயதில் அடிக்கடி கேட்பான், இப்போதும் கூட அவ்வபோது கேட்கிறான்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கடவுள்களை பற்றி இர்பான் குரலில் கேட்டது,  நீச்சல் குளத்தைப்பற்றி புதுச்சேரியை பற்றி கூறியது பின்பு ஆனந்தியைப்பற்றிய வசனம். அனைத்திற்கும் மேலாக ரிச்சர்ட் பார்க்கரை பிரியும்போது கண்ணீராக ஊற்றும் வசனம்.

படம் முழுவதும் நீங்கள் பயணப்படாவிட்டாலும் உங்களை ஆங்காங்கே இயக்குனர் காட்டுவது இவனுக்கு பிடித்திருந்தது.

அத்திரைப்படத்தைவிடவும் நீங்கள் நன்றாக நடித்த திரைப்படங்கள் பல இருக்கிறது என்பதை இவனறிவான். அதில் சிலவற்றை இவனும் பார்த்திருக்கிறான்.

ஆனாலும் இவனுக்கு லைஃப் ஆஃப் பையில் உங்களை கண்டதைதான் இப்போது கூற வேண்டுமென்று தோன்றியது.

ஜீராசிக் வோர்லுடுக்கு முன்பே லைஃப் ஆஃப் வை வந்திருந்தாலும் இவன்  ஜுராசிக் வோர்ல்டுக்கு பின்பாகத்தான் லைஃப் ஆஃப் பை-யை பார்த்தான்.

சென்ற வாரத்தில் கூட, இவன் நீங்கள் வாழ்ந்த திரைப்படமான lunchbox-ல் வரும் சில பிடித்தமான காட்சிகளை பார்த்துக்கொண்டிருந்தான்.

பின்பு அதே நாளில் உங்களின் karwaan திரைப்படத்தில் நீங்கள் செய்யும் சேட்டைகளை ரசித்து பார்த்தவாறே இருந்தவன், இறுதியில் karwaan திரைப்படத்தில் வரும் பாடல்களை காணொலியாக ஒலிபரப்ப விட்டான்.

‘Heart quake’ பாடலின் காட்சிகளில் வரும் உங்களை இவனுக்கு அவ்வளவு பிடிக்கும். சிறு சிறு முகபாவணைகள், உடலசைவு, கண்களின் நடிப்பு என நீங்கள் அவற்றில் சற்றே வித்தியாசமாக தெரிந்தீர்கள் இவனுக்கு.

தீடிரென்று உங்களின் இறப்பு செய்தியை கேட்டதும் உங்களின் பல இரசிகர்களை போலவே இவனும் அதிர்ச்சிக்குள்ளாகி வருத்தப்பட்டான்.

பின்பு சமூக வலைதளம் பக்கம் வந்ததும் பலரும் உங்களைப்பற்றிய கருத்துக்களை பதிவிடுவதை கண்டு நெகிழ்ந்தும் போனான்.

நிச்சயமாக உங்களின் இழப்பு திரைப்பட உலகினருக்கும் இவனைப்போன்ற இரசிகர்களுக்கும், இவனைவிட மேலான இரசிகர்களுக்கும் வருத்தத்தையும் அதிர்ச்சையையும் தந்திருக்கிறது.

Rest in peace IRRFAN sir! We miss you IRRFAN sir!

Previous articleஅதிகமானோர் வேலையை இழக்கும் அபாயம்; பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு(ILO)
Next articleஇந்தியாவில் 1,897 புதிய covid-19 தொற்றுகள்,  73 இறப்புகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here