கொரோனா பரவல் காரணமாக உலக அளவில் பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு(ILO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எண்ணிக்கை 1.5 பில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 வைரஸானது 30 இலட்சத்திற்கும் மேற்பட்டோரை உலக அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது, மேலும் 2,20,000த்திற்கும் மேற்பட்டோரின் உயிரை பலி வாங்கியுள்ளது.
மேலும் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு(ILO) , அமைப்பு சாரா தொழிலாளர்கள் அதிக அபாயத்தில் உள்ளனர் எனவும், சில்லரை விற்பனை, உற்பத்தி துறை மற்றும் உணவு சேவைதுறை ஆகியவர்கள் இதில் அடங்குவர் என தெரிவித்தது.
ஏற்கனவே, இரண்டு பில்லியன் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அவர்களின் வருமானத்தில் 60% அளவுக்கு கொரோனா பாதித்த முதல் மாதத்தில் இழந்துள்ளனர் என இந்த அமைப்பு தெரிவித்தது.
“மில்லியன்களுக்கும் அதிகமானவர்களுக்கு வருமானம் இல்லை அப்படி என்றால் அவர்களுக்கு உணவு இல்லை, எதிர்காலம் இல்லை. “மில்லியன்களுக்கும் அதிகமான தொழில்கள் உலக அளவில் நலிவடைந்து உள்ளது”, என பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் பொது இயக்குனர் குய் ரைடர்(Guy Rider) தெரிவித்து உள்ளார்.
“அவர்களிடத்தில் போதுமான சேமிப்பும் இல்லை. இதுதான் உலக தொழில்களின் உன்மையான முகம், இப்போது நாம் அவர்களுக்கு உதவாவிட்டால் அவர்கள் மிகவும் நசிந்த நிலைக்கு தள்ளப்படுவார்கள்,” என தெரிவித்தார்.