எல்லோருக்கும் ஒரு வாட்ச் பார்சல்; அசத்திய நயன்தாரா
நகைச்சுவைப் படம் இயக்குவதில் எம்.ராஜேஷ் வல்லவர். இவர் இயக்கிய முதல் மூன்று படங்கள் சூப்பர் ஹிட்.
தற்பொழுது சிவகார்த்திகேயன், நயன்தாராவை வைத்து மிஸ்டர் லோக்கல் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு மேலும் பலர் இதில் நடித்து வருகின்றனர். ஹிப் ஹாப் ஆதி படத்திற்கு இசையமைக்கிறார்.
ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். கோடை விடுமுறையில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன் மிஸ்டர் லோக்கல் படப்பிடிப்பு காட்சிகளில் பங்கேற்ற நயன்தாரா, படப்பிடிப்பு முடிந்தவுடன் படக்குழுவினருக்கு கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கியுள்ளார்.
மேலும் தன்னுடைய ஓவியம் வரைந்தவருக்கு ஆட்டோகிராப் இட்டு, அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார்.
தற்பொழுது அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.