Home நிகழ்வுகள் தமிழகம் சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக செல்லலாம் – அதிரடி அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக செல்லலாம் – அதிரடி அறிவிப்பு

432
0
சென்னை மெட்ரோ

சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக செல்லலாம் – அதிரடி அறிவிப்பு

சென்னை பயணிகள் வாகனம் என்றாலே நிரம்பி வழியும். சாதாரண சேர் ஆட்டோ என்றால் கூட இடித்துப்புடித்து அமர்ந்து பயணிப்பார்கள்.

ஏசி பஸ்கள் முதலில் அறிமுகம் செய்யப்பட்டபோது அதிக கட்டணம் என பலர் பயணிப்பதை தவிர்த்தனர்.

ஆனால் இன்று ஏசி பஸ்களில் நிற்கக்கூட இடம் இல்லாத அளவிற்கு கூட்டம் அலைமோதுகின்றது.

அதேபோன்றே சென்னை மெட்ரோ ரயில் சேவையும். ஆரம்பித்தது முதல் சற்று மந்தமாகவே காணப்படுகிறது.

மெட்ரோ ரயில் கட்டணம் அதிகமாக இருப்பதால், அதைவிட ஆட்டோ கட்டணங்கள் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருப்பதாலும் மக்கள் ஆட்டோவிலேயே செல்கின்றனர்.

இதனால் மெட்ரோ ரயில்வே பல்வேறு சலுகைகளை அவ்வபோது அளித்து வருகிறது. மேலும் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக கட்டணக் குறைப்பும் செய்தது.

தற்பொழுது பயணிகளை கவர அனைத்து மெட்ரோ ரயில்களிலும் நாளை இரவு வரை இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என அதிரடி அறிவிப்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Previous articleஎல்லோருக்கும் ஒரு வாட்ச் பார்சல்; அசத்திய நயன்தாரா
Next articleநல்ல நினைவுகளுடனும், பாடத்துடனும் நாடு திரும்புகிறோம் – ரோஹித்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here