டிக்டாக் வீடியோ வெளியிட்ட பெண் போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சஸ்பெண்ட் ஆனவுடன் சினிமா வாய்ப்பு தேடி வந்தது. அர்பிதா சவுத்தரி மகிழ்ச்சி.
குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தைச் சேர்ந்த லங்நாஜ் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருபவர் அர்பிதா சவுத்தரி.
இவர் ஒரு டிக்டாக் பிரியை. அடிக்கடி டிக்டாக் செய்து வடமாநில அளவில் புகழ் பெற்றுள்ளார். ஆர்வக்கோளாரில் காவல்நிலையத்திற்குள்ளேயே டிக்டாக் வீடியோ வெளியிட்டார்.
இந்த சம்பவம் ஜீலை 2019-ஆம் ஆண்டு நடைபெற்றது. சஸ்பெண்ட் ஆனாலும் அதைப்பற்றி அர்பிதா கவலைப்படவில்லை.
முழுநேரமும் டிக்டாக் வீடியோ வெளியிடத் துவங்கினார். இதன் பிறகு சினிமா ஆல்பம் ஒன்றில் அர்பிதா நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அடுத்தடுத்து நான்கு ஆல்பம் பாடல்களில் நடித்து முடித்துவிட்டார்.
தன் தந்தையின் விருபத்திற்காகவே போலீஸ் வேலையில் சேர்ந்ததாகவும், தனக்கு மாடலிங் துறையிலேயே விருப்பம் உள்ளது. அந்த ஆசை தற்பொழுது நிறைவேறி உள்ளது எனக் கூறியுள்ளார்.