Home சினிமா இந்திய சினிமா வில் ஸ்மித் பாராட்டிய ரன்வீரின் ‘கல்லி பாய்’

வில் ஸ்மித் பாராட்டிய ரன்வீரின் ‘கல்லி பாய்’

340
0
வில் ஸ்மித்

வில் ஸ்மித் பாராட்டிய ரன்வீரின் ‘கல்லி பாய்’

கல்லி பாய் என்ற ஹிந்தி படத்தின் மூலம் மீண்டும் சிறந்த கம்பேக் கொடுத்துள்ளார் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்.

ரன்வீர் சிங், ஆலியா பாட் நடிப்பில் வெளிவந்த கல்லி பாய் திரைப்படத்தை ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பல்வேறு பிரபலங்களும் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

பாலிவுட் மட்டும் இல்லாமல் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தும் ‘கல்லி பாய்’ படத்தைப் புகழ்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வில்ஸ்மித் பாராட்டு

“யோ ரன்வீர். வாழ்த்துகள். நீங்கள் செய்தது எனக்கு மிகவும் பிடித்தது. நான் அந்தக் கால ஹிப்ஹாப் முதல் உலகில் இருக்கும் அனைத்து விதமான ஹிப்ஹாப்பையும் கேட்டுள்ளேன்.

நீங்கள் செய்தது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வென்று காட்டுங்கள்” என்று வில் ஸ்மித் பேசியுள்ளார். மேலும் ‘கல்லி பாய்’ படத்தின் ‘அப்னா டைம் ஆயேகா’ பாடலும் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

மும்பையைச் சேர்ந்த ராப்பர்களான விவியன் ஃபெர்னான்டஸ் மற்றும் நவீத் ஷேக் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு கல்லி பாய் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ரன்வீர் பதில் ட்வீட் 

“அசல் ராப்பர் நடிகரிடமிருந்து பாராட்டு. உங்களுக்கு என் மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here