Home சினிமா கோலிவுட் Bhoomi Teaser: டுவிட்டரில் டிரெண்டாகும் பூமி!

Bhoomi Teaser: டுவிட்டரில் டிரெண்டாகும் பூமி!

355
0
Bhoomi Teaser

Bhoomi Teaser, Jayam Ravi; பூமி டீசர் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

Jayam Ravi, ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் பூமி படத்தின் டீசர் எப்போது என்ற அறிவிப்பு வந்துள்ளது.

ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரவி. இப்படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி என்று அழைக்கப்பட்டார்.

மேலும், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தின் மூலம் இளம் புயல் என்று ஜெயம் ரவியின் ஒவ்வொரு படத்திற்கும் டைட்டில் கார்டில் வைக்கப்பட்டார்.

இப்படத்தைத் தொடர்ந்து பேராண்மை, நிமிர்ந்து நில், ரோமியோ ஜூலியட், தனி ஒருவன், டிக் டிக் டிக், மிருதன், அடங்க மறு, கோமாளி என்று மாஸ் படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.

பூமி (Bhoomi)

இந்த நிலையில், தற்போது ஜெயம் ரவி நடிப்பில் பூமி படம் உருவாகி வருகிறது. பூமி படத்தை இயக்குனர் லட்சுமண் இயக்கி வருகிறார்.

பூமி படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நித்தி அகர்வால், சதீஷ், ரோனித் ராய், ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர்.

வரும் மே மாதம் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டும் தல அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டும் பூமி படம் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், பூமி படத்தின் டீசர் Bhoomi Teaser எப்போது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் 9 ஆம் தேதி பூமி டீசர் வெளியாகிறது.

இதன் காரணமாக பூமி டீசர் ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. ஜெயம் ரவியின் 25 ஆவது படமாக உருவாகி வரும் பூமி விவசாயத்தை மையப்படுத்திய படம் என்று போஸ்டரைப் பார்த்தாலே தெரிகிறது.

இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுஜா விஜயகுமார் தயாரித்துள்ளார்.

SOURCER SIVAKUMAR
Previous articleஎன்ற ஒய்ப் தான் முக்கியம் சாரே; அதிரவைத்த மஞ்ச சட்டை வீரர்
Next articleAjithKumar Fake Letter: அஜித் சார்பில் வக்கீல் நோட்டீஸ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here