என்ற ஒய்ப் தான் முக்கியம் சாரே; அதிரவைத்த மஞ்ச சட்டை வீரர். மனைவி உலகக்கோப்பை பைனலில் விளையாடுவதை நேரில் காணச் சென்றுவிட்டார்.
ஆஸ்திரேலியா vs தென்ஆப்ரிக்கா
ஆஸ்திரேலியா – தென்ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே இரண்டு போட்டிகள் முடிவுவடைந்து உள்ளது. இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ளது.
இந்நிலையில் போட்டியில் இருந்து விலகி உள்ளார் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க். காரணம் காயம் இல்லை அவரின் மனைவி.
மகளிர் உலகக்கோப்பை டி20 2020
வேகபந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மனைவி அலிசா ஹீலி. இவர் ஆஸ்திரேலிய மகளிர் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன்.
மகளிர் உலகக்கோப்பை டி20 போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணி மோத உள்ளது. மனைவிக்கு ஆதரவாக போட்டியை நேரில் காணச் செல்கின்றார் ஸ்டார்க்.
தன்னுடைய கேரியரை விட மனைவி உலகக்கோப்பை வெல்வது முக்கியம் என கிளம்பியது மற்ற ஆஸ்திரேலிய அணி வீரர்களை சற்று வாய்பிளக்க வைத்துள்ளது.
மகளிர் தினத்தன்று இந்த உலக கோப்பை போட்டி நடக்கிறது. மேலும் டி20 போட்டி நடக்கும் வருடமும் 20 20.
இப்படி ஒரு சிறப்பு வாய்ந்த தருணத்தை இப்போட்டியை நேரில் சென்று பார்ப்பதில் என்ன தவறு உள்ளது.