Home விளையாட்டு வாசிம் ஜாபர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

வாசிம் ஜாபர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

231
0

வாசிம் ஜாபர் அனைத்து போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்

இந்திய அணியில் 2000ம் – 2007 ஆம் ஆண்டு வரை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீரனாக விளங்கியவர் வாசிம் ஜாபர்.

31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர் 1946 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 212 ரன்கள் குவித்துள்ளார்.

ஐந்து சதங்களும், 11 அரை சதங்களும் இதில் அடங்கும்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 16 பிப்ரவரி 1988 ஆம் ஆண்டு பிறந்தவர் தான் வாசம் ஜாபர்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2000 ஆம் ஆண்டு அறிமுகமான இவர்.

அதே தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 2008 ஆம் ஆண்டு கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

இவர் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். பெரிதாக ஒருநாள் போட்டியில் சோபிக்கவில்லை.

1996 – 2015 ஆம் ஆண்டு வரை மும்பை அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடிய இவர், 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு விதர்பா அணியில் விளையாடி வந்தார்.

இவரை முதல் தர மற்றும் உள்ளூர் போட்டிகளில் இந்தியாவின் ஜாம்பவான் என்றே கூறலாம்.

256 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 19,220 ரன்கள் குவித்துள்ளார்.

இதில் 57 சதங்களும் 89 அரை சதங்களும் அடங்கும்.

முதல் தர போட்டியில் அதிக பட்சம் 314 ரன்கள் ஆகும் சராசரியாக 50.00 வைத்துள்ளார் .

2008-2009 ஆம் ஆண்டு ஐபிஎல் இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி உள்ளார்.

2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆன்டிகுவே வில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் எதிரான டெஸ்ட் போட்டிகளில் 212 ரன்கள் குவித்து 500 நிமிடங்கள் களத்தில் நின்றார்.

டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் ஒரு இந்தியர் எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும்.

2007ம் ஆண்டு உலக டெஸ்ட் லெவன் அணியில் இவர் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் 11000 ரன்களுக்கு மேல் குவித்து அதிக ரன் குவித்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

அதிக ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடி உள்ள வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்.

தற்போது இவர் வங்கதேச கிரிக்கெட் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மார்ச் 7ஆம் தேதி, இன்று வாசம் ஜாபர் தனது 42வது வயதில் அனைத்து வகை போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Previous articleலிசிபிரியா கங்குஜம்; டியர் மோடி என்னை கொண்டாடாதீர்கள் என்ற 9 வயது சிறுமி
Next articleஎன்ற ஒய்ப் தான் முக்கியம் சாரே; அதிரவைத்த மஞ்ச சட்டை வீரர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here