Home அரசியல் லிசிபிரியா கங்குஜம்; டியர் மோடி என்னை கொண்டாடாதீர்கள் என்ற 9 வயது சிறுமி

லிசிபிரியா கங்குஜம்; டியர் மோடி என்னை கொண்டாடாதீர்கள் என்ற 9 வயது சிறுமி

0
352
லிசிபிரியா கங்குஜம்
லிசிபிரியா கங்குஜம்

லிசிபிரியா கங்குஜம்; டியர் மோடி என்னை கொண்டாடாதீர்கள் என்ற 9 வயது சிறுமி, Who is Licypriya Kangujam

சமீபத்தில் அனைத்து சமூக வலைதளங்களையும் கைவிடுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் பெண்கள் தினத்தன்று மட்டும் அவரது கணக்கை பெண்களுக்காக பயன்படுத்த முடிவு செய்தார்.

govtofindia என்ற ட்விட்டர் பக்கத்தில் 9 வயது சிறுமி லிசிபிரியா கங்குஜம் (Licypriya Kangujam) இளம் காலநிலை ஆர்வலர் டாக் செய்யப்பட்டு இவரைப்போன்று சிறந்து விளங்கும் பெண்கள் யாரும் உங்களுக்கு தெரியுமா?

2019-ம் ஆண்டு இவர் அப்துல் கலாமின் குழந்தைகள் விருதை வென்றுள்ளார். மேலும், உலக அமைதி மற்றும் இந்திய அமைதிக்கான விருதையும் பெற்றுள்ளார்.

இவர் போன்ற பெண்மணிகள் தெரிந்தால் #SheInspiresUs என்ற ஹஷ்டக்கில் பதிவிடுங்கள். அவர்களின் கருத்தை திரு மோடி அவர்களின் கணக்கில் போட்டு உலகம் முழுவதும் தெரிய செய்வோம் என பதிவிடப்பட்டது.

இதைபார்த்த அந்த சிறுமி டியர் மோடி நீங்கள் என்னுடைய கருத்தையோ நான் சொல்வதையோ கேட்கபோவதில்லை. அதனால் என்னை கொண்டாடுவதை விட்டு விடுங்கள்.

இந்த ஹஷ்டக்கில் என்னை குறிப்பிட்டதால் நான் பெருமிதம் கொள்கிறேன். ஆனால் நீங்கள் கொடுத்த இந்த மரியாதையை நான் நிராகரிக்கிறேன்.

“அரசாங்கம் எனது குரலைக் கேட்கவில்லை. ஆனால், இன்று அவர்கள் என்னை நாட்டின் எழுச்சியூட்டும் பெண்ணாகத் தேர்ந்தெடுத்தனர். இது நியாயமா?” எனக் கேள்வி எழுப்பி மற்றொரு டிவிட் போட்டுள்ளார்.

Who is Licypriya Kangujam

மணிப்பூரைச் சேர்ந்த 9 வயது சிறுமி லிசிபிரியா கங்குஜம். இவர் 2018-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி மங்கோலியாவில் நடந்த ஐ.நா நிகழ்வில் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான என்னுடைய குரலை முதன்முதலாக உயர்த்தினார்.

காலநிலை மாற்றத்துக்கு எதிராக உலகத் தலைவர்கள் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

2019-ம் ஆண்டு இவர் அப்துல் கலாமின் குழந்தைகள் விருதை வென்றுள்ளார். மேலும், உலக அமைதி மற்றும் இந்திய அமைதிக்கான விருதையும் பெற்றுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here