Home சினிமா கோலிவுட் குட்டி ஸ்டோரி வீடியோ: விஜய் பிறந்தநாளுக்கு கீர்த்தியின் வயலின் வாழ்த்து!

குட்டி ஸ்டோரி வீடியோ: விஜய் பிறந்தநாளுக்கு கீர்த்தியின் வயலின் வாழ்த்து!

333
0
Keerthy Suresh Violin Video

Keerthy Suresh Violin Video; குட்டி ஸ்டோரி வீடியோ: விஜய் பிறந்தநாளுக்கு கீர்த்தியின் வயலின் வாழ்த்து! விஜய் இன்று தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறியதைத் தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் வயலினில் மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடலை வாசித்து விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் இன்று தனது 46 ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார். அவர் கேக் வெட்டினாரோ இல்லையோ அவரது சார்பில் ரசிகர்கள் கேக் வெட்டி விஜய்யின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி மகிந்தனர்.

ரசிகர்களுடன் இணைந்து சினிமா பிரபலங்கள் அனைவரும் விஜய்க்கு சமூக வலைதளங்கள் மூலமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் வீடியோ வெளியிட்டு தங்களது அன்பையும், மரியாதையும் வெளிக்காட்டினர்.

அந்த வகையில், விஜய்யுடன் இணைந்து பைரவா மற்றும் சர்கார் ஆகிய படங்களில் நடித்து கீர்த்தி சுரேஷ், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆம், விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி பாடலை வயலின் வாசித்து தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கீர்த்தி சுரேஷ் வயலின் வாழ்த்து என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அதோடு, கீர்த்தி சுரேஷ் வயலின் வாசிக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷ் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்த பென்குயின் படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

ஆனால், படத்தின் கதை என்னவோ பழசுதான். கொஞ்சம் மாற்றி த்ரில்லராக கொடுத்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இது போன்று த்ரில்லர் கதை கொண்ட படங்கள் ஏராளமாக வெளியாகியிருக்கிறது.

அதில், விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் படம் குறிப்பிடத்தக்கது.

Previous articleHBD Thalapathy Vijay: NonPareilThalaAJITH நம்பர் ஒன் இடத்தில் தல அஜித்!
Next articleதேவயானி 46ஆவது பிறந்தநாள்: ஹலோவில் டிரெண்டாகும் தேவயானி பாடல்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here