Home சினிமா கோலிவுட் இயக்குநர் மாரி செல்வராஜ் பிறந்தநாள் இன்று!

இயக்குநர் மாரி செல்வராஜ் பிறந்தநாள் இன்று!

0
668
Mari Selvaraj Birthday

Mari Selvaraj  மாரி செல்வராஜ் இன்று தனது 36 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் மிஸ்டர் புயல் டீம் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம்.

திருநெல்வேலிக்கு அருகில் உள்ள புளியங்குளம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ் Mari Selvaraj.

வறட்சி காலங்களில் விவசாயம் இல்லாமல், இவரது தந்தை வெளியூர்களுக்கு சென்று வேஷமிட்டு ஆடியிருக்கிறார்.

சென்னைக்கு வந்த மாரி செல்வராஜ் Mari Selvaraj இயக்குநர் ராம்-மிடம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.

சில வருடங்கள் பத்திரிக்கையாளராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்த நிலையில், கதிர், யோகி பாபு நடிப்பில் வந்த பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார்.

மாரி செல்வராஜ் Mari Selvaraj

பரியேறும் படத்தின் மூலம் சிறந்த இயக்குநருக்காக Behindwoods Gold Medal, 16ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விருது கைப்பற்றியுள்ளார்.

அதோடு இல்லாமல், இந்தப் படத்திற்காக, சிறந்த இயக்குநருக்காக, நார்வே தமிழ் திரைப்பட விருது, 8 ஆவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, 66 ஆவது பிலிம்பேர் விருது (தெற்கு) ஆகிய விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டார்.

இப்படி பல விருதுகளை கைப்பற்றிய இயக்குநர் மாரி செல்வராஜ் இன்று தனது 36 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு மிஸ்டர் புயல் டீம் சார்பில் நாம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.

பரியேறும் பெருமாள் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் படத்தை இயக்கி வருகிறார்.

யார் கேள்வி கேட்கிறார்? யார் கேள்வி கேட்கவில்லை? யாருடைய கேள்விக்கு பதில் கிடைக்கிறது, யாருக்கு பதில் கிடைக்கவில்லை என்பது போன்ற பல சாராம்சங்களை கொண்டு கர்ணன் படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here