Home சினிமா கோலிவுட் கல்யாண வீடு கோபி மற்ற தொடர்களில் இருந்து வேறுபடுவது ஏன்?

கல்யாண வீடு கோபி மற்ற தொடர்களில் இருந்து வேறுபடுவது ஏன்?

403
0
கல்யாண வீடு கோபி

கல்யாண வீடு கோபி மற்ற தொடர்களில் இருந்து வேறுபடுவது ஏன்? சன் டிவி மெகாத்தொடர் பார்ப்பவரா நீங்கள்? kalyana veedu gopi.

கோபி என்ற பெயரை கேட்டவுடன் மனதில் உடனே தோன்றுவது ‘மெட்டி ஒலி’ என்கிற மெகா தொடர் தான்.

திருமுருகன் என்கிற கோபி

இந்த சீரியலை பிடிக்காத தமிழ் ரசிகர்களே இருக்க மாட்டார்கள். அப்படி ஒரு தொடர் இன்றளவும் மக்கள் மனதில் இடம் பிடித்தது. இந்த சீரியலை இயக்கியவர் திருமுருகன்.

திருமுருகன் என்று சொன்னால் பாதி பேருக்குத் தெரியாது கோபி என்று சொன்னால் தான் தெரியும். அந்த அளவுக்கு சீரியல் பார்க்கும் ரசிகர்களை தன்பக்கம் வைத்துள்ளார் கோபி.

தமிழ் சீரியல் கிங்

மெட்டி ஒலி, நாதஸ்வரம், குல தெய்வம், கல்யாண வீடு போன்ற சீரியல்கள் இவரது நடிப்பு மற்றும் இவரது இயக்குனர் திறமைகளைப் பேசும்.

மெட்டி ஒலியில் குடும்பங்களில் நடக்கும் மாமியார் மருமகள் சண்டைகள், கணவன் மனைவி சண்டைகள், இதனால் கணவன் மனம் மாறி மாறி செல்லுதல் போன்றவற்றை காதலுடன் கூறியிருப்பார் நம்ம கோபி.

இந்த சீரியலில் முதன் முதலாக நடிப்பிலும் கோபியாக வலம் வந்தார். அடுத்த வந்த நாதஸ்வரம், நான்கு தங்கைகளுக்கு அண்ணனாக நடித்தார்.

தன் ஆசைகளை விட குடும்பத்தில் உள்ள தேவைகளுக்கு முக்கயத்துவம் கொடுத்து எடுத்திருப்பார். 1356 எபிசோட்களை நிறைவு செய்தது.

மௌலியும் பூவிலங்கு மோகனும் கோபிக்கு அப்பா மற்றும் சித்தப்பாவாக நடிப்பில் பின்னி எடுத்திருப்பார்கள்.

அடிதடி மற்றும் சண்டைகள் தேவையில்லாத கதைகள் எப்போதும் கோபி நாடகத்தில் ரொம்பவே குறைவுதான்.

தங்கைகளுக்கு மனைவிக்கு, குடும்பத்தில் எவருக்கும் எதிரிகளால் பிரச்சினைகள் வரும்போது கோபி வரமாட்டாரா என்கிற ஏக்கம் ரசிகர்களிடம் தோன்றும்.

கோபி வந்தவுடன் ஷ்லோ மோஷன்ல கேமிராவைத் திருப்பும் போது அதிரடியான பின்னனி இசையில் கோபி வந்து நிப்பாரு பாருங்க, வீட்டில உள்ள மாமியாரும் மருமகளும் கைதட்டி விசில் அடிக்கிற அளவுக்கு இருக்கும். அந்த அளவுக்கு ஹீரோ கதைக்கு தேவை என்பதை பதிய வைப்பார்.

நாதஸ்வரம் நாடகத்தில் உலக சாதனையும் செய்திருக்கிறார், 23 நிமிடம் 25 நொடி நேரலையாக ஒளிப்பதிவு மற்றும் இசையை செய்து ஒளிப்பரப்பினார். இதுவும் கோபியே சேரும்.

அடுத்து குல தெய்வம் சீரியல் இதுல கோபி நடிக்கவில்லை. ஆனால் விறுவிறுப்பாக செல்லக்கூடிய சீரியலாக அமைந்து ரசிகர்கள் மனதில் நின்றது.

அடுத்த சீரியல் வழக்கம்போல  கோபி ஹீரோ அவருக்கு மூன்று தங்கச்சிகள். சொல்லவா வேணும்? பாசத்தால் தன் இயக்குனர் திறமையாலும் நடிப்பின் திறமையாலும் கோபி இறங்கி சிக்ஸர் அடிப்பாருங்க!

கல்யாண வீடு கோபி

அந்த அளவுக்கு வெற்றிநடையில் சென்று கொண்டு இருக்கிற சீரியல் தான் கல்யாண வீடு. யூடியூப் உலகத்திலும் தினசரி எபிசோட்க்கு 5 லட்சம் பார்வையாளர் இருக்கிறார்கள்.

கல்யாண வீடு சீரியலில் இரண்டு மாத காலம் கோபியை காட்டவில்லை, ரசிகர்கள் யூடியூபில் கமெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

கோபி எப்போ வருவார், எப்போ வருவார், சீரியல் இனி பார்க்க மாட்டேன் என்று, ஒருவழியாக கோபி என்ட்ரி கொடுத்துட்டார். அப்பறம் என்ன சீரியல் டிஅர்பி வேற லெவல்.

இந்த சீரியலில் எப்போதெல்லாம் பிரச்சினை வரும் போது கோபியின் என்டரி மாஸ் சீன்ஸ் தான்.

தங்கைக்காக விட்டுக்கொடுத்து போவதும் தாயை வீட்டுக்கொடுக்காமல் பேசுவதும், சொந்தக்காரர்களின் கஷ்டங்களை தானே ஏற்பதும் கோபி தன் கதாபாத்திரத்தை அருமையாக செதுக்கியிருப்பார்.

தன் தங்கைகளுக்காக தன் சந்தோஷங்களை தள்ளி வைப்பதை இந்த தொடரிலும் தொடர்ந்து இருப்பார்.

எந்த இடத்திலும் நிதானமாக செயல்படுவதிலும், விட்டுக்கொடுத்து போவதிலும், பெண்ணியத்தை உயர்த்துவதிலும் கோபிக்கு நிகர் கோபியே.

எதற்கும் பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை துணிச்சலுடன் காட்டுபவர் கோபி. இப்படித்தான் ஓர் ஆண்மகன் இருக்க வேண்டும் என்பதற்கு பல உதாரணம் கோபியிடம் இருக்கும்.

கஷ்டங்களை கையாள்வதிலும் சொந்தங்களை கையாள்வதிலும் கோபியை அடிச்சிக்க ஆளே இல்லைங்க. ஏழரை வந்த எல்லோருக்கும் கஷ்டம்னு சொல்லுவாங்க ஆனால் சன் டிவி ரசிகர்களுக்கு மட்டும் ஹாப்பி தாங்க.

கோபியின் குட்டி ஸ்டோரி

திருமுருகனா வந்தாரு,
மெட்டி ஒலி கோபியா நின்னாரு,
நாதஸ்வரத்த எடுத்தாரு
குல தெய்வத்த நினைச்சாரு
கல்யாண வீட்டில ஜெய்சாரு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here