WWCT20I BANw vs AUSw: மகளிர் உலகக்கோப்பை டி20 போட்டி 2020. வங்கதேசத்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா மகளிர் அணி. விளையாட்டுச்செய்திகள்.
மகளிர் உலகக்கோப்பை டி20 போட்டி 2020
பிப்.27: 7-வது இருபது ஓவர் மகளிர் உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது.
பத்து அணிகள் பங்கு பெற்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பிரிவு-ஏ வில் ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளும், பிரிவு – பி யில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் விளையாடுகிறது.
WWCT20I BANw vs AUSw
இன்று பிரிவு ‘ஏ’ வில் நடைபெற்ற 10வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் மோதியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
மூனே, ஹிலே அதிரடி
தொடக்க ஆட்டகாரர்களாக பெத் மூனே மற்றும் அலிசா ஹிலே களமிறங்கினார்கள். வங்கதேச வீராங்கனைகளின் பந்துவீச்சை அடித்து நொறுக்கித் தள்ளினார்கள்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 15.1 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தது. ஹிலே 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், மூனே 81 ரன்னும், கார்டனர் 9 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் சேர்த்தனர். வங்கதேசம் தரப்பில் கேப்டன் சல்மா கதுன் மட்டும் 39 ரன்கள் வழங்கி ஒரே ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியா வெற்றி
இமாலய இலக்கை வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணியினர் இருபது ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
போராட்டம் இல்லாமல் முடிந்தது இரண்டாவது இன்னிங்ஸ். இதன் மூலம் 86 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வங்கதேசத்தை வென்றது.
வங்கதேச அணியில் அதிகபட்சமாக ஃபர்ஹானா ஹாஹ் 36, நிகர் சுல்தானா 19, ஷமிமா சுல்தானா மற்றும் ரூமானா அஹமது தலா 13 ரன்களும் சேர்த்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் மேஹன் ஸ்கட் 3 விக்கெட்டும், ஜோனஸன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார். அதிரடியாக ஆடிய அலிசா ஹிலே ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்த உலககோப்பையில் ஆஸ்திரேலியா பெறும் இரண்டாவது வெற்றி, முந்தைய ஆட்டத்தில் இலங்கை வீழ்த்தியது. முதல் ஆட்டத்தில் இந்தியாவுடன் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஏற்கனவே இந்தியா அரையிறுதிக்கு சென்றுவிட்டது.
ஆஸ்திரேலியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் மெல்போர்னில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கிறது.
உலகக்கோப்பை புள்ளி பட்டியல்
பிரிவு ஏ
TEAM P W L P
IND : 3 3 0 6
NZ : 2 1 1 2
AUS : 3 2 1 4
SL : 2 0 2 0
BAN : 2 0 2 0
பிரிவு பி
TEAM P W L P
ENG : 2 1 1 4
PAK : 1 1 0 2
RSA : 1 1 1 2
WI : 2 1 1 0
THAI : 2 0 2 0