Rajinikanth Wedding Anniversary: ரஜினிகாந்தின் 39-ஆவது திருமண நாள் இன்று. இதனை முன்னிட்டு தலைவர் 169 படத்தின் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
Rajinikanth Wedding Anniversary
ரஜினிகாந்த் – லதா தம்பதியினர் இன்று தங்களது 39 ஆவது திருமண நாளை கொண்டாடும் நிலையில், ஜப்பான் ரசிகர்கள் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் வரிசையில் இடம்பெற்றிருப்பவர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். சாதாரண பஸ் நடத்துனராக வாழ்க்கையைத் தொடங்கிய ரஜினிகாந்தை இன்று ஒட்டு மொத்த சினிமாவும் வியந்து பார்க்கும் அளவிற்கு புதிய உச்சம் பெற்றுள்ளார்.
ரஜினிகாந்த் – லதா திருமணம்
இவர், கடந்த 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி லதாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா என்று இரு மகள்கள் இருக்கின்றனர். இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.
ரஜினிகாந்த் 39ஆவது திருமண நாள்
இந்த நிலையில், ரஜினிகாந்த் – லதா தம்பதியினர் இன்று தங்களது 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இவர்களுக்கு கோலிவுட் சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஜப்பான் ரசிகர்கள் கொண்டாட்டம்
குறிப்பாக ஜப்பானைச் சேர்ந்த ரசிகர்கள் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது: ரசிகர் ஒருவர் தமிழக பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்துகொண்டு தலைவா திருமண நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்க மற்ற ரசிகர்களோ விசில் அடித்து பேப்பர்களை கிழித்து பறக்கவிட்டுள்ளனர்.
அப்போது அவர்கள் தங்களது கைகளில் தர்பார் போஸ்டர் மற்றும் ரஜினியின் மக்கள் மன்ற கொடியினை வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவர்169 பூஜை
ரஜினியின் 39-ஆவது திருமண நாளை முன்னிட்டு அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், தலைவர்169 ஆவது படம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், தலைவர்169 ஆவது படத்தின் பூஜை வரும் மார்ச் முதல் வாரத்தில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5-ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது. இது ரஜினி ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
கமல் ஹாசன் – ரஜினிகாந்த் கூட்டணி
இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமல் ஹாசன் தயாரிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் ரஜினியும், கமலும் இணைந்து 9 தமிழ் படங்களிலும், 2 தெலுங்கு படங்களிலும், ஒரு ஹிந்தி படத்திலும் நடித்துள்ளனர்.
இதையடுத்து, தற்போது தலைவர்169 படத்தில் இருவரும் இணைந்துள்ளனர். தலைவரின்169 ஆவது படம் லோகேஷ் கனகராஜின் 5-ஆவது படம்.
அண்ணாத்த
தற்போது ரஜினிகாந்த் தலைவர்168 ஆவது படமான அண்ணாத்த படத்திலும், லோகேஷ் கனகராஜ் விஜய்யின் மாஸ்டர் படத்திலும் பிஸியாக இருப்பதால், இந்த படங்களின் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட பிறகு தலைவர்169 ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணாத்த படத்தை சிவா இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. இதில், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருடத்திற்கு ஒரு படத்தை மட்டும் இயக்கி வருகிறார். இதுவரை அவியல், மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார். அடுத்து ரஜினியின் தலைவர்169 படத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.