Home சினிமா கோலிவுட் சூர்யாவின் பிறந்தநாள் போஸ்டரை வெளியிட்ட 115 பிரபலங்கள்!

சூர்யாவின் பிறந்தநாள் போஸ்டரை வெளியிட்ட 115 பிரபலங்கள்!

279
0
Suriya Birthday Fest CDP

Suriya; சூர்யாவின் பிறந்தநாள் போஸ்டரை வெளியிட்ட 115 பிரபலங்கள்! வரும் 23 ஆம் தேதி சூர்யா தனது 45ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், 115 பிரபலங்கள் இணைந்து அவரது பிறந்தநாள் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

சூர்யாவின் பிறந்தநாளுக்காக உருவாக்கப்பட்ட போஸ்டரை 115 பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார்.

தற்போது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் கொரோனா காரணமாக இதுவரை வெளியாகவில்லை.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா அருவா மற்றும் வாடிவாசல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், வரும் 23 ஆம் தேதி சூர்யா தனது 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதன் காரணமாக சூரரைப் போற்று படத்தின் டிரைலர் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, சூர்யாவின் பிறந்தநாளை இப்போதே கொண்டாடும் வகையில், காமென் டிபி உருவாக்கப்பட்டுள்ளது.

அதனை இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள் ஆகியோர் என்று கிட்டத்தட்ட 115 பிரபலங்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

கார்த்தி, கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், மாதவன், கவுதம் மேனன், ஹரி, தமன்னா, பாண்டிராஜ், சிம்ரன், ஆர்யா, அதிதிராவ் உள்பட 115 பிரபலங்கள் வெளியிட்டனர்.

தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு, SuriyaBirthdayFestCDP என்ற டுவிட்டர் ஹேஷ்டெக்கும் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த காமென் டிபி புகைப்படத்தில் சூர்யாவைச் சுற்றிலும் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதில் பலரும் நடந்து செல்கின்றனர்.

அவருக்கு பின்புறம் பல அடுக்குமாடி வீடுகள் இருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஎனது மைத்துனருக்கு கொரோனா: விவேக் டுவீட்!
Next articleசிவகார்த்திகேயனின் டாக்டர் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here