Karthi; 20 படங்கள்; 20 இயக்குநர்கள்: கார்த்தி படைத்த புதிய சாதனை! நடிகர் கார்த்தியின் 17 வருட சினிமா வாழ்க்கையில், 20 படங்களில் நடித்துள்ளார். அந்த 20 படங்களையும் வெவ்வேறு இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்.
#20Films20DirectorsWithKarthi என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கார்த்தி. சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. மெக்கானிக்கல் பிரிவில் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார்.
படிப்பை முடித்த கையோடு ரூ.5000 சம்பளத்திற்கு வேலை பார்த்துள்ளார். அதன் பிறகு நியூயார்க் சென்று தொழில்துறை பொறியியல் படிப்பு படித்துள்ளார்.
இந்த படிப்பு படித்துக் கொண்டே இயக்குநர் படிப்பும் படித்துள்ளார். நியூயார்க்கிலேயே கிராபிக்ஸ் டிசைனராகவும் பணியாற்றியுள்ளார். இயக்குநருக்கான முதல் இரு பிரிவுகள் மட்டுமே படிதது முடித்துள்ளார்.
நான் எப்போதுமே சினிமாவில் இருக்க விரும்புகிறேன் என்று எனக்குத் தெரியும். ஆனால், என்ன செய்ய விரும்புகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.
அதன் பிறகு வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த கார்த்தி முதலில் இயக்குநர் மணி ரத்னத்தை சந்தித்து அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
கார்த்தி உதவி இயக்குநராக பணியாற்றிய முதல் படம் ஆய்த எழுத்து. அதன் பிறகு நடிக்கும் வாய்ப்பு வரவே பருத்திவீரன் படத்தில் நடித்தார்.
இதுதான் கார்த்தியின் முதல் படம். இயக்குநர் அமீர் இயக்கத்தில் பிரியாமணி, பொன்வண்ணன், சரவணன் ஆகியோர் பலரது நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் பருத்திவீரன்.
இந்தப் படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து, கார்த்தி அடுத்தடுத்து சினிமா வாய்ப்பு பெற்று தற்போது வரை 20 படங்களில் நடித்து முடித்துள்ளார்.
பருத்திவீரன் படத்தில் தொடங்கி, ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, கோ, சகுனி, அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் அழகுராஜா, பிரியாணி, மெட்ராஸ், கொம்பன், தோழா, காஷ்மோரா,
காற்று வெளியிடை, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், தேவ், கைதி, தம்பி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இதில், பருத்திவீரன், சிறுத்தை, மெட்ராஸ், தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், கைதி ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சுல்தான், பொன்னியின் செல்வன் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சினிமாவில் ஒரு நடிகர் தனது 20 படங்களில் வெவ்வேறு இயக்குநர்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்று அது கார்த்தி மட்டுமே.
இதன் காரணமாக, டுவிட்டரில், #20Films20DirectorsWithKarthi என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. மேலும்,
20 படங்கள், 20 இயக்குநர்கள், 17 வருடங்கள், 14 இசையமைப்பாளர்கள், 19 நடிகைகள், 23 தேசிய மற்றும் மாநில விருதுகளுக்கு பரிந்துரை, 6 விருதுகள், உதவி இயக்குநர் நடிகர் பின்னணி பாடகர், விவசாயிகளுக்கு என்று அறக்கட்டளை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#20Films20DirectorsWithKarthi
20 Movies
20 Directors
17 Years
14 Music Directors
19 Heroines
23 National and State Nominations
6 Awards
3 Professions( AD, Actor , Singer)
1 Foundation for farmer
1 Actor #Karthi
The Name is KARTHI SIVAKUMAR