Gautham Karthik; டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக் #50DaysToGoForAnbullaGauthamBday கௌதம் கார்த்திக் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி, தனது 31ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், டுவிட்டரில், #50DaysToGoForAnbullaGauthamBday என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
கௌதம் கார்த்திக் பிறந்தநாளுக்கு இன்னும் 50 நாட்கள் இருக்கும் நிலையில், #50DaysToGoForAnbullaGauthamBday என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் நவரச நாயகன் கார்த்திக். எத்தனையோ மாஸ் படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவரது மகன் கௌதம் கார்த்திக் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடல் படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.
இந்தப் படத்திற்கு சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றார். அதோடு விஜய் விருது, சைமா விருதுகளை பெற்றார்.
கடல் படத்தைத் தொடர்ந்து, என்னமோ ஏதோ, வை ராஜா வை, முத்துராமலிங்கம், ரங்கூன், இவன் தந்திரன், ஹர ஹர மஹாதேவகி, இந்திரஜித்,
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், இருட்டு அறையில் முரட்டு குத்து, மிஸ்டர் சந்திரமௌலி, தேவராட்டம் என்று பல படங்களில் நடித்துள்ளார். தற்போது முஃப்தி என்ற கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
ஆக்ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். வரும் 2021 ஆம் ஆண்டு இந்தப் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி கௌதம் கார்த்திக் தனது 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அவரது பிறந்தநாளுக்கு இன்னும் 50 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், டுவிட்டரில், #50DaysToGoForAnbullaGauthamBday என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக அனைவருமே வீட்டில் இருக்கும் நிலையில், கௌதம் கார்த்திக் தனது அம்மா ராகினி உடன் கடற்கரையில் மாஸ் அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.