Home சினிமா கோலிவுட் வைரலாகும் கோப்ரா சியான் விக்ரம் பிரத்யேக புகைப்படம்!

வைரலாகும் கோப்ரா சியான் விக்ரம் பிரத்யேக புகைப்படம்!

375
0
Chiyaan Vikram Cobra Movie

Chiyaan Vikram Cobra Stills; வைரலாகும் கோப்ரா சியான் விக்ரம் பிரத்யேக புகைப்படம்! கோப்ரா படத்தில் இடம்பெற்றுள்ள சியான் விக்ரமின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோப்ரா படத்தின் சியான் விக்ரமின் பிரத்யேகமான புகைப்படம் வைரலாகி வருகிறது.

இமைக்கா நொடிகள் புகழ் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் கோப்ரா.

வித்தியாசமான தலைப்பு கொண்ட இந்தப் படத்தில் சியான் விக்ரம் முதல் முறையாக 15 கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

கோப்ரா படத்தின் சியான் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

மேலும், கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே எஸ் ரவிக்குமார், ஜான் விஜய், கனிகா, ரோபோ சங்கர், பூவையார், பத்மபிரியா ஜானகிராமன், மிர்ணாளினி ரவி, டிஎஸ்ஆர், ரோஷன் மேத்யூ ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளர் லலித்குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

கிட்டத்தட்ட இப்படத்தின் அதிகப்படியான காட்சிகள் முடிக்கப்பட்ட நிலையில், இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட இருக்கிறது.

கொரோனா பாதிப்பு முற்றிலும் சரியான பிறகு கோப்ரா படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தப் படத்தின் சியான் விக்ரமின் பிரத்யேகமான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அண்மையில், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் டிராக் தும்பி துள்ளல் பாடல் வெளியாகி யூடியூப்பில் 5 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleடுவிட்டரில் டிரெண்டாகும் #50DaysToGoForAnbullaGauthamBday ஹேஷ்டேக்!
Next articleஆடி மாத தரிசனம் 10: விக்ரமாதித்தன் வழிப்பட்ட காளி திருக்கோவில்! மூன்று கைகளுடன் காட்சி தரும் அம்பிகை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here