Home சினிமா கோலிவுட் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் மகளுக்கு கொரோனா உறுதி!

ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் மகளுக்கு கொரோனா உறுதி!

281
0
Aishwarya Arjun COVID 19

Aishwarya Arjun; ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் மகளுக்கு கொரோனா உறுதி! ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று பாசிட்டிவ் என்று வந்துள்ளது.

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 4 மாதங்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக, வரும் 31 ஆம் தேதி வரையில் 6ஆவது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா லாக்டவுன் காரணமாக, சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக வீட்டிற்குள்ளேயே சினிமா பிரபலங்கள் முடங்கியிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும், கொரொனா பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை.

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா என்று வரிசையாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில், கன்னட நடிகரும், அர்ஜூனின் உறவினருமான சிரஞ்சீவி சார்ஜா திடீரென்று உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத நிலையில், சிரஞ்சீவி சார்ஜா மற்றும் அர்ஜூனின் சகோதரரும் நடிகருமான துருவா சார்ஜாவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா பாதித்தது.

இந்த நிலையில், கொரோனா பரிசோதனையில் செய்ததில் அர்ஜூனின் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

Previous articleமாநாடு அப்டேட் வெளியிட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!
Next articleடிவியில் அதிகம் பார்க்கப்பட்ட நடிகர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த தளபதி விஜய்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here