Action King Arjun Corona Video; ரஜினி, கமல், அஜித், விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள்: அர்ஜூன்! கொரோனா வைரஸ் குறித்து அனைவரும் அறிந்தும் வெளியில் சுற்றுவதை மக்கள் நிறுத்த வேண்டும் என்று ஆக்ஷன் கிங் அர்ஜூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அர்ஜூன் கொரோனா பாதிப்பு குறித்து வீடியோ வெளியிட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கும் அதிகமான நாடுகளைக் கடந்து தற்போது இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா வைரஸ்க்கு இந்தியாவில் மட்டும் 12க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும், 562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், அப்பாவி ஜனங்கள் முதல் சினிமா, அரசியல் பிரபலங்கள் என்று பலரும் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வீட்டில் சிலர் சமூக வலைதளங்களிலும், சிலர் குடும்பத்தோடும், சிலர் தனிமையிலும் தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஆக்ஷன் கிங் அர்ஜூன் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறுகையில், இந்த வீடியோவும் கொரோனா வைரச் பற்றியதுதான்.
எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், யாரும் வீட்டை விட்டு வெளியில் வராதீர்கள்.
இது உங்களுக்காக மட்டுமல்ல, வயதான தாய், தந்தை, குழந்தை, குடும்பம் இந்த நாடு என்று எல்லோரையும் காப்பாற்றும் முயற்சி.
மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு உதவி வருகிறது. அவர்களுக்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நீங்கள் வெளியில் வந்துவிட்டால் யாராலேயும் ஒன்றும் செய்ய முடியாது.
ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதுதான் நமக்கு தெரியும். காற்றில் மூலமாகவும் பரவுவதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வருகிறது.
இது மாதிரி நேரத்தில் நாம் வீட்டை விட்டு வெளியிலேயே வரக்கூடாது. ஒருவேளை வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க சென்றால், முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு பாதுகாப்பாக சென்று வர வேண்டும்.
எனது நண்பர், இத்தாலியில் நர்சாக பணியாற்றுகிறார். அவரிடம் இது குறித்து பேசும் போது, அங்கு ஒரு நாளைக்கு 5500 லிருந்து 6000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது என்றும், சுமார் 550 லிருந்து 600 பேர் வரை உயிரிழக்கின்றனர் என்றும் கூறினார்.
இப்படியெல்லாம் கேட்கும் போது நாம் எந்த அளவிற்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை யோசித்து பாருங்கள்.
180 கோடி மக்கள் தொகை கொண்ட நமது இந்தியாவில் இத்தாலி போன்று ஒரு நிலைமை வந்தால், அய்யோ யோசித்துக் கூட பார்க்க முடியாது.
இந்திய அரசியலமைப்பு நம் அனைவருக்கும் ஒரு உரிமை கொடுத்திருக்கிறது. அது என்னவென்றால், பேச்சுரிமை, கருத்து சுதந்திரம், சமத்துவம் என்று பல உரிமைகளை கொடுத்திருக்கிறது.
ஆனால், கொலை செய்வதற்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால், தெரிந்தோ, தெரியாமலோ வெளியில் சென்றாலே இன்னொருவரை கொலை செய்வதற்கு சமம்.
ஏனென்றால், ஒருவரிடமிருந்து 100 பேர், 200, 1000 என்று பரவிக்கொண்டே இருக்கும். நம் நாட்டை காக்க வேண்டிய கடமை உங்களிடம் தான் இருக்கிறது.
நான் சினிமாவில் இருப்பதன் காரணமாக ஒரு சிறிய விஷயம் சொல்லிக்கொள்கிறேன். ரஜினி, கமல், அஜித், விஜய் என்று மாஸ் நடிகர்களுக்கு தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 95 சதவிகிதம் பேர் இருப்பார்கள்.
இந்த ரசிகர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் இதையெல்லாம் தடுத்து நிறுத்த முடியும். எப்படியென்றால், ஒவ்வொரு ரசிகர் மன்றத்தின் மூலமாக அவர்களது ரசிகர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் வாட்ஸ் அப் மூலமாக வெளியே வராதீர்கள் என்று மெசேஜ் அனுப்பலாம்.
உங்களது நடிகர்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் மரியாதை, அன்பை காட்டுவதற்கு இது ஒரு சரியான நேரமாக இருக்கும் என்றார்.
மேலும், இந்த சூழ்நிலை எனது முன்பாக ஒரு தீவிரவாதி இருக்கிறார். அவரது கையில் துப்பாக்கி இருக்கிறது. எனது கையிலும் துப்பாக்கி இருக்கிறது.
நம்மை அவர்கள் சுடுவதற்கு முன்பாக நாம் அவர்களை சுட வேண்டும் இதுதான் சரி. ஆனால், இப்போது நிலைமை, துப்பாக்கியை எடுத்து தமது நெற்றியில் நாமே வைத்துக்கொண்டு நம்மை நாமே சுடும் நிலைமையில் இருக்கிறோம்.
இதைவிட முட்டாள்தனம் வேறு எதுவும் இருக்காது. ஆமாம், நமக்கு எதிரில் கொரோனா வைரஸ் இருப்பது தெரிந்தும் கூட நாம் வெளியில் ஜாலியாக சுற்றி வருகிறோம்.
ஹேப்பியாக ஒரு ஹாலிடே கிடைத்திருக்கிறது என்றும் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்னாடி கொரோனா வந்திந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும்.
ஆனால், இதுதான் முதல் முறை. அதனால், இதனுடைய பிரச்சனையும் உங்களுக்கு அவ்வளவாக புரியமாட்டிங்கு.
ஆகையால், எல்லோருமே வீட்டிலேயே இருங்கள், உங்களது குடும்பத்தை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள் நாட்டையும் காப்பாற்றுங்கள், ஜெய்ஹிந்த் என்று கூறியுள்ளார்.