Home சினிமா கோலிவுட் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் அருண் விஜய்: வைரலாகும் வீடியோ!

வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் அருண் விஜய்: வைரலாகும் வீடியோ!

478
0
Arun Vijay Parkour Stunts

Arun Vijay; வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் அருண் விஜய்: வைரலாகும் வீடியோ! அருண் விஜய் வீட்டிலேயே ஜிம் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் படங்களின் கதைகளுக்கு ஏற்ப உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகர்களும் இருக்கிறார்கள். விக்ரம், அருண் விஜய், சரத்குமார், அஜித், பரத், ஆர்யா என்று நடிகர்களின் பட்டியலை சொல்லிக் கொண்டே போகலாம்.

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதனால், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சாதாரண பொதுமக்கள் என்று அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வீட்டில் சிலர் சமூக வலைதளங்களிலும், சிலர் குடும்பத்தோடும், சிலர் தனிமையிலும், சிலர் கடினமான உடற்பயிற்சி என்று தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் அருண் விஜய் ஜிம்மிற்கு செல்ல முடியாமல் வீட்டையே ஜிம்மாக மாற்றி தினமும் ஒர்க் அவுட் செய்து வருகிறார்.

அதுமட்டுமன்றி ஸ்டண்ட் பயிற்சியையும் செய்கிறார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு வீட்டிலேயே பார்க்கர் ஸ்டண்ட் செய்கிறேன். வீட்டிலேயே சில உடல் செயல்பாடுகளை செய்து உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த 21 நாட்களுக்கு தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மாஃபியா சேப்டர் 1. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, மாஃபியா 2 படமும் உருவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அக்னி சிறகுகள், பாக்ஸர், இனம் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleகால்பந்தாட்ட ராஜா பீலே புகழும் வீரர் யாரென்று தெரியுமா?
Next articleரஜினி, கமல், அஜித், விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள்: அர்ஜூன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here